தென்னிந்தியாவின் எஃகு கோட்டை… இந்தியா டுடே பட்டியலில் இடம்பிடித்த ஸ்டாலின்

Published On:

| By Selvam

இந்தியா டுடே இந்த நவம்பர் மாத இதழில் “இந்தியாவின் அதிகார சபை” என்ற தலைப்பில் அதிகார வலிமைமிக்க 20 அரசியல் கட்சி தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், முதலாவது இடத்தில் பிரதமர் மோடி, இரண்டாவது இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மூன்றாவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நான்காவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி  என நீளும் இந்த பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 8வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பட்டியலில் இடம்பெற்றதற்கான காரணம்?

  • மொழித் தடையால் ஸ்டாலின் பேச்சு வட மாநிலங்களை அடையாமல் இருக்கலாம். ஆனால், பூர்வீக நிலமான தமிழ்நாட்டில் அவருக்குள்ள செல்வாக்கு காரணமாக அவரின் குரல் டெல்லி அதிகாரத்தின் செவியை எட்டுகிறது.
  • லோக்சபாவில் திமுகவுக்கு 22 எம்பிக்கள், ராஜ்யசபையில் 10 எம்பிக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 70% வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
  • எல்லா மாநிலங்களிலும் பாஜகவுக்கு சில தொகுதிகள் கிடைத்த சூழலிலும் தமிழ்நாட்டில் ஒரு இடம்கூட கிடைக்காமல் செய்தது பாஜகவுக்கு அதிக வருத்தத்தை தந்தது. எனவே, தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணிக்கு எஃகு கோட்டை போல ஸ்டாலின் திகழ்கிறார்
  • 2021ஆம் ஆண்டில் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதில் இருந்து, அவரது தலைமையிலான திமுக அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது. பார்ச்சூன் 500 நிறுவனங்கள் உட்பட 130 நிறுவனங்களிடம் இருந்து ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்.

 

செல்வம்

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

முக்கிய நிர்வாகிகள் மாற்றம்… எச்சரித்த விஜய்

“தெலுங்கர்கள் குறித்து இழிவாக பேசவில்லை” – மாறி மாறி பேசும் கஸ்தூரி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share