2040க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியா

Published On:

| By Kavi

India to send Man to Moon by 2040

சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தின் தயார்நிலை குறித்து பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 17) ஆய்வு மேற்கொண்டார்.

சந்திரயான் 3, ஆதித்யா எல்-1 என இஸ்ரோவின் வெற்றி திட்டங்களை தொடர்ந்து விண்வெளி துறையில் இந்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ADVERTISEMENT

அந்தவகையில் நிலவுக்கு இந்தியா சார்பில் மனிதனை அனுப்பும் திட்டம் குறித்த ஆய்வு நடந்து வருகிறது.

இதுதொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி விஞ்ஞானிகளுடன் ஆய்வு மேற்கொண்டது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ADVERTISEMENT

“இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

ககன்யான் திட்டத்தின் விரிவான கண்ணோட்டம் குறித்தும் ஏவுகணைகளில் மனிதர்களை அனுப்புவது குறித்தும் கணினி தகுதி போன்ற இதுவரை உருவாக்கப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பற்றியும் விண்வெளித்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

3 ஆளில்லா விண்கலம் உட்பட சுமார் 20 முக்கிய சோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

ஏவுகணையிலிருந்து மனிதர்கள் பாதுகாப்பாக வெளியேறுவது குறித்த பரிசோதனை வாகனத்தின் முதல் செயல்விளக்கம் அக்டோபர் 21 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றைய ஆய்வுக்கூட்டத்தில் இதன் தயார்நிலை குறித்தும் 2025-ல் திட்டத்தை தொடங்குவதை உறுதிசெய்வது குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது.

சமீபத்திய சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா எல் 1 திட்டங்கள் உட்பட இந்திய விண்வெளி முன்முயற்சிகளின் வெற்றியைத் தொடர்ந்து, 2035க்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைப்பது மற்றும் 2040-க்குள் சந்திரனுக்கு முதல் இந்தியரை அனுப்புவது உள்ளிட்ட புதிய மற்றும் லட்சிய இலக்குகளை கொள்ள வேண்டும் என்று பிரதமர்  மோடி அறிவுறுத்தினார்.

சந்திரயான் திட்டங்கள், அடுத்த தலைமுறை ஏவுகணை (என்.ஜி.எல்.வி) உருவாக்கம், புதிய ஏவுதளம் அமைத்தல், மனிதனை மையமாகக் கொண்ட ஆய்வகங்கள் அமைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் இதில் அடங்கும்.
வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் மற்றும் மார்ஸ் லேண்டர் உள்ளிட்ட கிரகங்களுக்கு இடையேயான பயணத்திட்டங்களை மனதில் கொண்டு பணியாற்றுமாறு இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் திறன்கள் மீது நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய உயரங்களை எட்டுவதற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை : எடப்பாடி பழனிசாமி

ஒரு பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம்: உச்சநீதிமன்றம் மறுப்பு!

லியோ டிக்கெட்டிற்கு அதிக கட்டணமா? புகார் எண்கள் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share