நெதர்லாந்து அணிக்கு 411 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

Published On:

| By Selvam

நெதர்லாந்து அணிக்கு 411 ரன்கள் இந்திய அணி இலக்கு நிர்ணயித்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று (நவம்பர் 12) நடைபெற்ற உலக கோப்பை கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ADVERTISEMENT

இந்திய அணி தரப்பில் முதலில் களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா, சுப்மன்கில் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அணியின் ரன்களை உயர்த்தினர். 11-ஆவது ஓவரில் நெதர்லாந்து பந்துவீச்சாளர் பால் வேன் மீகன் வீசிய பந்தை சிக்சருக்கு துரத்தினார் சுப்மன் கில்.

ADVERTISEMENT

ஆனால் எதிர்பாராத விதமாக எல்லைக்கோட்டருகே தேஜா நிதாமனுரு கேட்ச் பிடித்தார். இதனால் சுப்மன் கில் 51 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக விராட் கோலி களமிறங்கினார்.

விராட் கோலி, ரோகித் ஷர்மா ஜோடி நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். பாஸ் டீ லீட் பந்துவீச்சில் ரோகித் ஷர்மா கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் நெதர்லாந்து வீரர்களின் பந்தை நாலாபுறமும் சிதற விட்டார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர ஆரம்பித்தது. 28-ஆது ஓவரில் விராட் கோலி அவுட்டாகி வெளியேறினார்.

ADVERTISEMENT

பின்னர் ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர், ராகுல் ஜோடி அதிரடியாக ஆடி இருவரும் சதமடித்தனர். 49.5-ஆவது ஓவரில் 102 ரன்கள் எடுத்த நிலையில் கே.எல்.ராகுல் அவுட்டானார். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து அணிக்கு 411 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: 40 பேர் கதி என்ன?

INDvsNED: கடைசி போட்டி… புதிய சாதனை படைக்க காத்திருக்கும் மூன்று இந்திய வீரர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share