முன்னதாக சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற 2022ம் ஆண்டுக்கான 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இதுவரை இல்லாத அளவாக, இந்தியா 28 தங்கப் பதக்கங்களுடன் 107 பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்திருந்தது.
இந்நிலையில், அதே ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் 2022ம் ஆண்டுக்கான 4வது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில், இந்தியா முதன் முறையாக 100 பதக்கங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
முன்னதாக, ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில், 15 தங்கங்களுடன் 72 பதக்கங்களை வென்றிருந்ததே, இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது.
கடந்த அக்டோபர் 22 அன்று ஹாங்சோவில் பிரம்மாண்ட துவக்க விழாவுடன் தொடங்கிய இந்த 4வது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள், இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்த விளையாட்டு திருவிழாவில் 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என, மொத்தம் 111 பதக்கங்களுடன் இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது.
100 MEDALS at the Asian Para Games! A moment of unparalleled joy. This success is a result of the sheer talent, hard work, and determination of our athletes.
This remarkable milestone fills our hearts with immense pride. I extend my deepest appreciation and gratitude to our… pic.twitter.com/UYQD0F9veM
— Narendra Modi (@narendramodi) October 28, 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரதமர் மோடி பாராட்டு!
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பாராட்டு செய்தியில், “ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள் வென்றது இணையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு நமது விளையாட்டு வீரர்களின் அதீத திறமை, கடின உழைப்பு, உறுதி ஆகியவையே காரணம்.
இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் நம் இதயங்களை மகத்தான பெருமையால் நிரப்புகிறது. நமது நம்பமுடியாத விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் முழு அமைப்புக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றிகள் நம் அனைவரையும் ஊக்குவிக்கின்றன. நம் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை நினைவூட்டுவதாக இவை அமைந்துள்ளன” என்று வாழ்த்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எந்த பிரிவில் எவ்வளவு பதக்கங்கள்?
அதிகப்படியாக தடகள போட்டிகளில் இந்தியா 55 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. இவற்றில் 18 தங்கம், 17 வெள்ளி மற்றும் 20 வெண்கல பதக்கங்கள் அடக்கம்.
இதற்கு அடுத்தபடியாக, பேட்மிண்டன் பிரிவில் 4 தங்கப் பதக்கங்களுடன் 21 பதக்கங்களை வென்று, இந்தியா அந்த பிரிவில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
3வதாக, செஸ் விளையாட்டில் 2 தங்கங்கள் உட்பட 8 பதக்கங்களை இந்தியா தன்வசமாக்கியுள்ளது.
வில்வித்தை பிரிவில் 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
அதேபோல, துப்பாக்கி சுடுதலில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள இந்தியா, 2 தங்கங்கள் உட்பட 6 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
கேனோயிங் பிரிவில் இந்தியா 4 பதக்கங்களை வென்றுள்ளது. குறிப்பாக, மகளிருக்கான படகு ஓட்டுதல் போட்டியில், 2 பிரிவுகள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி என 2 பதக்கங்களை வென்று பிராச்சி யாதவ் அசத்தியுள்ளார்.
பவர் லிப்ட்டிங் விளையாட்டில், இந்திய வீரர், வீராங்கனைகள் 3 பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஜூடோ மட்டும் டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில், இந்தியாவுக்கு தலா 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
ரோவிங், நீச்சல், டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளில், இந்தியாவுக்கு தலா 1 பதக்கம் கிடைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியாவுக்கு முன் உள்ள நாடுகள் எவை?
இந்த விளையாட்டு தொடரில், 214 தங்கம், 167 வெள்ளி, 140 வெண்கலம் என மொத்தம் 521 பதக்கங்களை அள்ளிக் குவித்துள்ள சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.
44 தங்கப் பதக்கங்களுடன் 131 பதக்கங்களை வென்ற ஈரான் 2வது இடத்தை தன்வசமாகியுள்ளது.
3வது இடத்தில், 42 தங்கம், 49 வெள்ளி, 59 வெண்கலம் உட்பட 150 பதக்கங்களை வென்ற ஜப்பான் உள்ளது.
30 தங்கப் பதக்கங்கள் உட்பட 103 பதக்கங்களை வென்றுள்ள கொரியா, 4வது இடத்தை பிடித்துள்ளது.
முரளி
கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது கல்வீச்சு: எடப்பாடி கண்டனம்!
”போரை நிறுத்துங்கள்”: ஐநா தீர்மானம் நிறைவேற்றம்… இந்தியா புறக்கணிப்பு!
