மாற்று சினிமாவின் முன்னோடி இயக்குனர் ஷியாம் பெனகல் காலமானார்!

Published On:

| By Selvam

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் ஷியாம் பெனகல் இன்று (டிசம்பர் 23) காலமானார். அவருக்கு வயது 90.

ஷியாம் பெனகல் 1934-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர். ஒரு எழுத்தாளராக தனது சினிமா கேரியரை தொடங்கிய அவர், 1962-ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில்  ‘Gher Betha Ganga’ என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.

தொடர்ந்து, அன்குர், நிஷாந்த், மந்தம், பூமிகா உள்ளிட்ட படங்களை இயக்கினார். கமர்ஷியல் சினிமாவில் இருந்து விலகி, யதார்த்தத்தை திரையில் காட்சிப்படுத்தி மாற்று சினிமாவின் முன்னோடியாக திகழ்ந்தார்.

கடைசியாக கடந்த 2023-ஆம் ஆண்டு ‘முஜிப்: தி மேக்கிங் ஆஃப் எ நேஷன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். அண்மைக்காலமாக, சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ஷியாம் பெனகல். கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி தனது 90-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்தநிலையில், மும்பை வொக்கார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷியாம் பெனகல் இன்று மாலை 6.38 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் அபத்த வாதம்!

பாரதியாருக்கு பிறகு கலைஞர்: கட்டணம் இல்லாமல் நாட்டுடைமை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share