சாம்பியன்ஸ் லீக்கில் துபாயில் நாளை (பிப்ரவரி 23) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் லீக் ஆட்டத்தில் சந்திக்கின்றன. மதியம் 2.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தி உற்சாகத்துடன் களம் காண்கிறது. நியூசிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்ததால், பாகிஸ்தான் தடுமாற்றத்துடன் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறி விடும். பாகிஸ்தான் தோற்றால் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.india pakistan match tommorrow
ஐ.சி.சி உலகக் கோப்பையை எடுத்துக் கொண்டால், இந்தியா 8 – 0 என்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா சற்று பின்தங்கியுள்ளது. மினி உலகக் கோப்பையாக கருதப்படும் இந்த தொடரில் 5 ஆட்டங்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் மூன்றிலும் இந்திய அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன.india pakistan match tommorrow
கடந்த 2017-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மிக மோசமாக விளையாடி இந்திய அணி பாகிஸ்தானிடம் 180 ரன்களில் தோற்ற கதையும் நடந்துள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 338 ரன்களை எடுத்தது. இந்திய அணி 158 ரன்களில் சுருண்டது. 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐ.சி.சி தொடரில் பாகிஸ்தான் பெற்ற முதல் கோப்பை இதுவாகும்.india pakistan match tommorrow
நாளை நடைபெறும் போட்டி குறித்து இந்திய முன்னாள் வீரர் யுவராஜ்சிங் கூறுகையில், துபாயில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை விட அதிக ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் கொண்டுள்ளது. எனவே, இந்தியாவை விட பாகிஸ்தான் வெற்றி பெற கூடுதல் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.. india pakistan match tommorrow
இதற்கிடையே, 20-ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது, தொடரை நடத்தும் பாகிஸ்தான் நாட்டின் பெயர் இந்திய அணி வீரர்கள் அணிந்த ஜெர்சியில் இடம் பெறவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொழில்நுட்ப கோளாறு என்று ஐசிசி விளக்கமளித்துள்ளது.