பகுதி 1 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு ஆயுதப் போர் மூண்டால் என்ன நடக்கும்?
அணுசக்திப் போரின் விளைவாக வான்வெளியின் அடுக்கு மண்டலத்தில் செலுத்தப்படும் வெவ்வேறு அளவு புகையின் காலநிலை விளைவுகளைக் கணக்கிட்டோம்.
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் அணுசக்திப் போர் நடந்தால் அது 150 டெராகிராம்கள் (ஒரு டெராகிராம் ஒரு மில்லியன் டன்களுக்குச் சமம்) புகையை உருவாக்கக்கூடும். இது அணுசக்திக் குளிர்காலத்தை உருவாக்கும். கோடையில்கூட மேற்பரப்பு வெப்பநிலை உறைபனிக்குக் குறைவாக இருக்கும். India Pakistan Consequences of a Nuclear War
இந்தியா-பாகிஸ்தான் விஷயத்தில், புகையின் அளவு இரு நாடுகளும் பயன்படுத்தும் அணு ஆயுதங்கள் எவ்வளவு பெரியதாக இருக்கலாம் என்பதைப் பொறுத்தது. இரு நாடுகளிடமும் இருக்கும் அணு ஆயுதங்கள் ஹிரோஷிமா குண்டின் அளவு (தோராயமாக 15 கிலோ டன்கள்) என்று நாங்கள் அனுமானித்துக்கொண்டோம்.

ஆனால் 2025 வாக்கில், இரு நாடுகளும் 50 கிலோ டன் அல்லது 100 கிலோ டன் குண்டுகளை வைத்திருக்கலாம். 1998ஆம் ஆண்டு இந்தியா 40 முதல் 50 கிலோ டன்கள்வரை உற்பத்தி செய்யும் ஆயுதத்தைச் சோதித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூண்டால், 15 கிலோ டன்கள்வரை உற்பத்தி செய்யும் ஆயுதங்களால் (இந்தியாவிலிருந்து 11, பாகிஸ்தானிலிருந்து 5.1) மேல் வளிமண்டலத்தில் மொத்தம் 16.1 டெராகிராம் (1 டெராகிராம் – 100 கோடி) கருப்பு கார்பன் செலுத்தப்படும் எனக் கணக்கிட்டோம். India Pakistan Consequences of a Nuclear War
50 கிலோ டன் ஆயுதங்களுக்கு 27.3 டெராகிராம்கள் (இந்தியாவிலிருந்து 19.8, பாகிஸ்தானிலிருந்து 7.5); 100 கிலோ டன் ஆயுதங்களுக்கு 36.6 டெராகிராம்கள் (இந்தியாவிலிருந்து 27.5, பாகிஸ்தானிலிருந்து 9.1). இந்தப் புகை சூரிய ஒளியால் சூடாக்கப்பட்டு, அடுக்கு மண்டலத்தில் மேலே உயர்த்தப்படும். அது அடுக்கு மண்டலத்தில் பல ஆண்டுகள் இருக்கும். எனவே அடுக்கு மண்டலத்தில் மழை பெய்யாது. India Pakistan Consequences of a Nuclear War

படம் 2, பல வருடங்களாக உலகளாவிய சராசரி வெப்பநிலையும் மழைப்பொழிவும் கணிசமாகக் குறையும் என்பதைக் காட்டுகிறது.
(படம் 2. உலகளாவிய சராசரி மழைப்பொழிவு (a), உலகளாவிய சராசரி வெப்பநிலை (b) ஆகியவை அணுசக்தி யுத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகளிலிருந்து மேல் வளிமண்டலத்தில் வெளியேற்றப்பட்ட வெவ்வேறு அளவு கருப்பு கார்பனுக்கான விளைவுகளைக் காட்டுகின்றன. செங்குத்து ஊதா நிறப் பட்டை சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த பனி யுகத்தின் உச்சத்தில் வெப்பநிலை வரம்பைக் குறிக்கிறது. )
படம் 3, நிலம், கடல் ஆகியவற்றின் வெப்பநிலை எவ்வாறு மாறும் என்பதைக் காட்டுகிறது. போருக்குப் பிறகு இரண்டாவது ஆண்டில் நடுத்தர சூழ்நிலைக்கான வெப்பநிலை மாற்றத்தின் வரைபடத்தையும் (50 கிலோடன் வெடிப்புகளிலிருந்து 27.3 டெராகிராம் புகை) காட்டுகிறது. அப்போது விளைவுகள் அதிகபட்சமாக இருக்கும். India Pakistan Consequences of a Nuclear War

(படம் 3. உலகளாவிய சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை (a) மற்றும் நில மேற்பரப்பு வெப்பநிலை (b) காலத்தின் செயல்பாடாக சரிவு. வண்ண-குறியீடு கருப்பு கார்பன் ஊசிகளைக் காட்டுகிறது. 1 டெராகிராம் (Tg) 1 மில்லியன் டன் ஆகும். 50 kt ஆயுதங்களைக் கொண்ட ஒரு சூழ்நிலைக்கு முதல் ஆண்டு மே மாதம் தொடங்கிய மோதலைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டில் சராசரியாக கடல், நில மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களின் உலகளாவிய பரவலை C பகுதி விளக்குகிறது, இதன் விளைவாக 27.3 Tg கருப்பு கார்பன் ஊசி போடப்படுகிறது. )
அணுசக்திக் குளிர்காலம் உலகம் முழுவதும் விவசாயத்தை முடக்கும். பில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தில் வாடுவார்கள். அமெரிக்க-ரஷ்யா அணுசக்திப் போரின் அளவுக்கு இல்லாவிட்டாலும், கற்பனையான இந்தியா-பாகிஸ்தான் அணுசக்திப் போரில் விவரிக்கப்பட்டுள்ள மூன்று காட்சிகளும் பல ஆண்டுகளுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
5 டெராகிராம் புகை உள்ள ஒரு நிகழ்விற்கான குறிப்பிட்ட பயிர்களுக்கு சீனாவிலும் அமெரிக்காவிலும் உணவு உற்பத்தி எவ்வாறு மாறும் என்பதைக் கணக்கிட்டுள்ளோம். உலகம் முழுவதும் குறிப்பிட்ட உணவுப் பயிர்கள், வெப்பநிலை, மழைப்பொழிவு, சூரிய ஒளி ஆகியவற்றில் அணு ஆயுதப் போரின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கான விரிவான கணக்கீடுகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். உயரும் புகை சூரிய ஒளியை உறிஞ்சி அடுக்கு மண்டலத்தை வெப்பப்படுத்துவதால் ஓசோன் அழிக்கப்படும். இதனால் புற ஊதாக் கதிர்கள் அதிகமாகப் பூமியை வந்தடையும். இது மேலும் பல எதிர்மறை விளைவுகளை உருவாக்கும்.
விவசாயத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றிய மதிப்பீடுகள் இன்னும் நிறைவடையவில்லை. சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் பொதுவான அளவீடு, நிகர முதன்மை உற்பத்தித்திறன், தாவர சுவாசத்தைக் கணக்கிட்ட பிறகு ஒளிச்சேர்க்கை மூலம் எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு கரிம தாவரப் பொருளாக மாற்றப்படுகிறது என்பதற்கான அளவீடு ஆகியவற்றைத் தற்போது கணக்கிடலாம். நிகர முதன்மை உற்பத்தித்திறன் என்பது நிலத்தில் எவ்வளவு உணவை வளர்க்க முடியும், மீன்களுக்குக் கடல்களில் எவ்வளவு உணவு வளரும் என்பதற்கான கணக்கீடு.

(படம் 4 ஐப் பார்க்கவும்.) இந்த முடிவுகளின் அடிப்படையில், இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுதப் போர் நடந்தால் அது விவசாயத்தில் பெரிய பாதிப்புகளையும் உணவுப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தும் என்ற முடிவுக்கு வரலாம். மக்கள் உணவைப் பதுக்கிவைக்கிறார்களா அல்லது பகிர்ந்துகொள்கிறார்களா என்பதைப் பொறுத்து, மில்லியன் கணக்கான அல்லது பில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கலாம்.
அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதும் நீக்குவதும்
அணு ஆயுதங்களைப் போரில் பயன்படுத்துவதன் நன்கு அறியப்பட்டதும், அதிகம் அறியப்படாததுமான பயங்கரமான விளைவுகளையும் நாங்கள் ஆராய்ந்திருக்கிறோம். இந்த ஆயுதங்கள், கொள்கையளவில், நாடுகளுக்கு இடையேயான போரைத் தடுப்பது என்னும் ஒரே ஒரு நியாயமான நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகளாவிய ராணுவ மோதல்கள் எதுவும் ஏற்படாததால், இன்றுவரை அந்த இலக்கு அடையப்பட்டுள்ளது என்று வாதிடலாம். ஆனால், அணு ஆயுதங்கள் பெருமளவில் குவிந்து கிடப்பதால் பயங்கரவாதமோ எண்ணற்ற பிராந்திய அளவிலான மோதல்களோ நின்றுவிடவில்லை. இவற்றால் பல இடங்களிலும் பயங்கரமான மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. India Pakistan Consequences of a Nuclear War
எல்லோரிடமும் அணு ஆயுதங்கள் இருந்துவிட்டால் யாருமே சண்டையிடத் தயங்குவார்கள் என்று கூறுவது நிச்சயமாக முட்டாள்தனமாக இருக்கும். மாறாக, உலகளாவிய சர்வதேச அடிப்படையில் பேச்சுவார்த்தைகளையும் தீர்வுக்கான வழிமுறைகளையும் நிறுவுவதுதான் 21ஆம் நூற்றாண்டில் மானுடப் படுகொலைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே பாதுகாப்பான, நடைமுறை சார்ந்த வழி. உலகளாவிய அமைதிக்கும் பாதுகாப்புக்குமான வழிமுறைகளைக் காண்பதற்கு, அணு ஆயுதங்களை ஒழிப்பதை நோக்கிச் செயல்படுவதே அக்கறையுள்ள குடிமக்களின், குறிப்பாக செல்வாக்கு மிக்க பதவிகளில் இருப்பவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
நமது வாழ்நாளில் இந்த இலக்கை நோக்கிய முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம். குறிப்பாக முக்கிய அணு ஆயுத சக்திகளிடையே தொடர்ச்சியான குறிப்பிட்ட அணு ஆயுத ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கிய அமைதித் திட்டங்கள், கொள்கைகள் ஆகியவையும் இந்தத் திசையை நோக்கிய காத்திரமான நடவடிக்கைகளே.
உதாரணமாக, 2017ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை 32 நாடுகள் அங்கீகரித்துள்ளன. 79 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன; 50 நாடுகள் அதை அங்கீகரித்தவுடன் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். India Pakistan Consequences of a Nuclear War
தற்போதைய ஒன்பது அணு ஆயுத நாடுகளும், அவற்றின் பல நட்பு நாடுகளும் இந்த முயற்சியை எதிர்த்தன. இந்த நாடுகள், ஏற்கனவே உள்ள அணு ஆயுதக் கிடங்குகளைப் படிப்படியாகக் குறைப்பது அல்லது இருக்கும் நிலையில் உறுதிப்படுத்திக்கொள்வதன் மூலம் மெதுவாகவும் கவனமாகவும் இவ்விஷயத்தில் செயல்பட விரும்புகின்றன. India Pakistan Consequences of a Nuclear War
அணு ஆயுதக் குறைப்புக்கும் அதை ஒழிப்பதற்குமான முற்போக்கான, நன்கு சிந்திக்கப்பட்ட திட்டம் முன்வைக்கப்பட்டால் அதைக் கண்டிப்பாகப் பாராட்டலாம். ஆனால் சில நாடுகள் அதற்கு பதிலாகப் பழைய பனிப்போர் காலத்தை மீண்டும் கொண்டுவர விரும்புவதாகத் தெரிகிறது.
அணு ஆயுதப் பெருக்கம் முடிவுக்கு வரவில்லை என்பது மட்டுமல்லாமல், கூடுதல் நாடுகள் அணு ஆயுதம் ஏந்துவதைப் பரிசீலித்துவருகின்றன. ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் ஆயுதக் கிடங்குகளை மேம்படுத்த முடிவுசெய்து, பழைய வகையைவிட மேலும் வலிமைள்ள புதிய தலைமுறை அணு ஆயுதங்களைப் பற்றிப் பேசுகின்றன. India Pakistan Consequences of a Nuclear War

“எதற்கும் கட்டுப்படாத” நாடுகள் – குறிப்பாக வட கொரியா – அணு ஆயுதங்களைக் களையத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினாலும் தங்கள் அணு ஆயுதத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துகின்றன. பயங்கரவாதக் குழுக்கள் இத்தகைய சாதனங்களுக்கான உலகளாவிய சந்தையில் அணுசக்தித் திறனை நாடுகின்றன.
இந்தச் சூழ்நிலையில், நமக்கு நன்கு தெரிந்த அறிவியலின் வெளிச்சத்தில், அமைதியை உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையாக அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தவும் இறுதியில் அழிக்கவும் உதவக்கூடிய நடவடிக்கைகளை நாம் ஆதரிக்க வேண்டும். உலகைக் காப்பாற்ற வேண்டுமானால் அதை நாம் செய்தே ஆக வேண்டும். India Pakistan Consequences of a Nuclear War
கட்டுரையாளர்கள் :
ஆலன் ரோபோக் – அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் புகழ்பெற்ற பேராசிரியராக உள்ளார்.
ஓவன் பி. டூன் – அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் துறையிலும், வளிமண்டல மற்றும் விண்வெளி இயற்பியலுக்கான ஆய்வகத்திலும் பேராசிரியராக உள்ளார். India Pakistan Consequences of a Nuclear War
சார்லஸ் ஜி. பார்டீன் – அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தில் உள்ள வளிமண்டல வேதியியல் அவதானிப்புகள் மற்றும் மாடலிங் ஆய்வகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ளார்.
லில்லி சியா – அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.
ஹான்ஸ் எம். கிறிஸ்டென்சன் – வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பில் அணு தகவல் திட்டத்தின் இயக்குநராக உள்ளார்.
மேத்யூ மெக்கின்சி – அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ளஇயற்கை வள பாதுகாப்பு கவுன்சிலில் (NRDC) அணுசக்தி, காலநிலை மற்றும் எரிசக்தி திட்டத்தின் இயக்குநராக உள்ளார்.
ஆர். ஜே. பீட்டர்சன் – அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார். India Pakistan Consequences of a Nuclear War
செரில் எஸ். ஹாரிசன் – அமெரிக்காவின் டெக்சாஸ் ரியோ கிராண்டே வேலி பல்கலைக் கழகத்தின் பூமி, சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.
நிக்கோல் எஸ். லவென்டுஸ்கி – கடல்சார் ஆய்வாளர் மற்றும் அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக உள்ளார்.
ரிச்சர்ட் பி. டர்கோ – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நன்றி: டெய்லர் அண்ட் ஃபிரான்சிஸ் ஆன்லைன்
தமிழில்: தேவா