ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கிய அடுத்த நிறுவனம்!

இந்தியா

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ தனது நிறுவனத்தில் பணியாற்றும் 3 சதவீத ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.

சமீபத்தில் கடந்த சில நாட்களாகவே பிரபல நிறுவனங்கள் அதில் பணியாற்றும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகிறது.

முதலில் ட்விட்டர் நிறுவனத்தை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்ட எலான் மஸ்க் அதிரடியாக அந்நிறுவனத்தின் 75 சதவீத ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட ஆப்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும் அதன் 13 சதவீத ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது.

zomato fire employees

தொடர்ந்து அமேசான் நிறுவனமும் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இப்படி பிரபல நிறுவனங்கள் அதன் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் இந்த வரிசையில் தற்போது உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோவும் இணைந்துள்ளது.

இது குறித்து சோமேட்டோ நிறுவனம் “செயல்திறன் மந்தநிலை காரணமாக 3 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது. சோமேட்டோ நிறுவனத்தில் தற்போது கிட்டத்தட்ட 3,800 ஊழியர்கள் பணியாற்றுகின்றார்கள்.

இந்த நடவடிக்கை சோமேட்டோவில் பணியாற்றும் ஊழியர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சோமேட்டோ நிறுவனத்தின் பங்குதாரர் மோகித் குப்தா நிறுவனத்தில் இருந்து விலகிக் கொள்வதாகத் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று (நவம்பர் 18) வழங்கியிருந்தார்.

zomato fire employees

கடந்த 2020 ஆம் ஆண்டு சோமேட்டோ நிறுவனம் 520 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. அதாவது 13 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் பிரபல நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மோனிஷா

பன்னீர்-தினகரன் சந்திப்பு நடக்கப்போகும் இடம் இதுதான்! 

காதல் படப்பிடிப்பு தளத்தில் உணவு பரிமாறிய மம்முட்டி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.