சண்டையில் முடிந்த சந்திப்பு : மன்னிப்பு கேட்க முடியாது’ கொதித்த ஜெலன்ஸ்கி ; கை கழுவிய டிரம்ப்

Published On:

| By Kumaresan M

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கொண்ட சந்திப்பு சண்டையில் முடிந்தது. இதனால், ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். அந்த சந்திப்பின்போது துணை அதிபர் ஜேடி வேன்ஸ் மற்றும் அமெரிக்க மீடியாக்கள் இருந்தன.

அமெரிக்க துணை அதிபர் வேன்ஸ் பேசிய போது, எந்த மாதிரியான ராஜதந்திரங்கள் பற்றி நீங்கள் கூறுகிறீர்கள் என்று ஜெலன்ஸ்கி எதிர்த்து கேட்டார். ‘நான் உங்கள் நாட்டுக்கு அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ராஜதந்திரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி பேசுகிறேன். நீங்கள் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க ஊடகத்தினர் முன்னிலையில் இப்படி பேசுவது அவமதிப்பதற்கு சமம் என்றார். Zelenskyy refuses to apologise

அதற்கு, போரின் போது, அனைவருக்கும் பிரச்னைகள் ஏற்படும். உங்களுக்கும் வருங்காலத்தில் நடக்கலாம் என்று ஜெலன்ஸ்கி பதிலடி கொடுத்தார்.

அப்போது , ஆவேசமாகக் குறுக்கிட்ட ட்ரம்ப், ‘ அது பற்றி நீங்கள் எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நாங்கள் உங்களின் பிரச்சினைகளை தீர்க்கவே முயல்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் உத்தரவிட வேண்டாம். உங்கள் விளையாட்டு இங்கு வேண்டாம்’ என்றார்.

தொடர்ந்து, ஜெலன்ஸ்கி நான் இங்கு விளையாட வரவில்லை என்று கூறவே, டிரம்போ நீங்கள் விளையாடுகிறீர்கள். லட்சக் கணக்கான மனித உயிர்களை வைத்து விளையாடுகிறீர்கள் . நீங்கள் நடந்துகொள்ளும் விதமே இந்த தேசத்துக்கு அவமதிப்பு.” என்றார்.Zelenskyy refuses to apologise

தொடர்ந்து, ட்ரம்ப் ஜெலன்ஸ்கியுடனான பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து மீடியாக்களை சந்திக்கும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ;’அதிபர் ட்ரம்ப்புடன் உக்ரைன் அதிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் உக்ரைன் அதிபர் மற்றும் குழுவினர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Zelenskyy refuses to apologise

இந்த நிலையில் ஜெலன்ஸ்கி அளித்துள்ள பேட்டியில், ‘நான் அமெரிக்க அதிபரை மிகவும் மதிக்கிறேன். அமெரிக்க மக்களையும் மதிக்கிறேன். நான் அவமதிக்கும் வகையில் தவறாக எதுவும் செய்து விடவில்லை. அதனால், மன்னிப்பு கேட்க மாட்டேன். அதே வேளையில், அமெரிக்காவின் உதவி இல்லாமல் நாங்கள் ரஷ்யாவை எதிர்கொள்வது கடினமானதாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share