இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கோவா சுற்றுலாத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது சொகுசு விடுதிக்கான சான்றிதழை புதுப்பிக்காத காரணத்திற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.
இடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யுவராஜ் சிங் கோவா மாநிலத்தில் மோரிஜிம் அருகே வர்ச்சவாடாவில் காசா சிங் என்றொரு சொகுசு வீட்டினை வாங்கியுள்ளார்.
தனது சொகுசு வீட்டை வாடகைக்கு விட்டுள்ள யுவராஜ் சிங் அதை அம்மாநில சுற்றுலாத்துறையிடம் முறையாக பதிவு செய்யவில்லை. இதனையடுத்து கோவா சுற்றுலாத்துறை இணை இயக்குநர் ராஜேஷ் காலே யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் டிசம்பர் 8 ஆம் தேதி யுவராஜ் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோவா சுற்றுலாத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவா சுற்றுலா சட்டம் 1982இன் கீழ் முறையாக பதிவு செய்யவேண்டும்.ஆனால் யுவராஜ் தனது சொகுசு வீட்டிற்கு இதை செய்யவில்லை. ஒருவேளை ஆஜராகி முறையாக விளக்கம் தரவில்லை என்றால் விதிமீறல் குற்றத்திற்காக தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி: மன்னர் கொடுத்த பரிசு!
ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!