பெங்களூருவில் நடுரோட்டில் இருசக்கர வாகனத்தின் பின்னால் 71 வயது முதியவரை, இழுத்து சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு நகரில் நேற்று மதியம் ஹொசஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாஹில் என்ற 25 வயது இளைஞன் இருசக்கர வாகனத்தில் சாலையில் மிக வேகமாக சென்று பொலீரோ கார் மீது மோதியுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனம் மற்றும் பொலீரோ கார் இரண்டும் கடுமையான சேதம் அடைந்துள்ளது.
பொலீரோ வாகனத்தில் இருந்த முத்தப்பா என்ற 71 வயது ஓட்டுநர் இளைஞனிடம் காரில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு தொகை வழங்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால் பணம் கொடுக்க மறுத்த சாஹில் அங்கிருந்து தப்பித்து செல்ல முயற்சித்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முத்தப்பா முயற்சித்தபோது வாகனத்தின் பின்னால் சிக்கிக் கொண்டுள்ளார்.
இருசக்கர வாகனத்தை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தவாறு இருந்த முத்தப்பாவை சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் தரதர என இழுத்துச் சென்றுள்ளார் சாஹில்.
சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தனது வாகனத்தை வேகமாக இரு சக்கர வாகனத்தின் முன் நிறுத்தி தடுத்து நிறுத்தினார்.
பொதுமக்கள் சாஹிலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 2 பிரிவுகளில் சாஹிலை கைது செய்த கோவிந்த் ராஜ் நகர் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த கார் ஓட்டுநருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கலை.ரா
ஸ்ரீஹரிகோட்டாவில் 3 ஆவது தற்கொலை: கணவர் இறந்த சோகத்தில் உயிரை மாய்த்த மனைவி!
3 மாநில தேர்தல்: முக்கிய அறிவிப்பு!