தங்கம் விலை இன்று (ஜூலை 30) சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஜூலை 29ஆம் தேதி சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.38,440க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று 22 கேரட் கொண்ட 8 கிராம் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 38,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 4,815 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் பவுனுக்கு 88 ரூபாய் உயர்ந்து 42,024 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.63,700 ஆக அதிகரித்து உள்ளது.
ஆடி மாதம் முடிந்து ஆவணியில் திருமண தேதிகள் நிறையவுள்ளன. இந்நிலையில் தங்கம் வெள்ளி விலை அதிகரித்து வருவது பெண் பிள்ளை பெற்றவர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா