விளம்பர தொழில்நுட்பப் பிரிவை மறுசீரமைக்கும் நோக்கில் யாஹூ நிறுவனம் தனது 1600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
உலக அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக அமேசான்,கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
அந்தவகையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் யாஹூ நிறுவனம் தனது 1600 ஊழியர்களை இந்த வருடம் பணி நீக்கம் செய்ய உள்ளது.
அதன்படி, வருடத்தின் முதல் பாதியில் 1000 ஊழியர்களையும், இரண்டாவது பாதியில் 600 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ய யாஹூ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
2021-ஆம் ஆண்டில் யாஹூவை 5 பில்லியன் டாலருக்கு தனியார் பங்கு நிறுவனமான அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் வாங்கியது.
இந்தநிலையில் விளம்பர வணிகத்தில் கவனம் செலுத்தவும், முதலீடு செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண வீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக குறைவான விளம்பரதாரர்கள் வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கையானது கூகுள் மற்றும் மெட்டா போன்ற பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கு வசதியாக இருக்கும் என்றும் யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யாஹூ தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் லான்சோன் கூறுகையில், “நிதி நெருக்கடியால் பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. திறன் வாய்ந்த நிறுவனமாக மாற்றுவதற்காக பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிநீக்கங்கள் யாஹூ நிறுவனத்தின் லாபத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் லாபகரமான வணிகத்தில் நிறுவனத்தை முதலீடு செய்ய அனுமதிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி-டி2