Wrinkles Monday - CSIR New Announcement!

“சுருக்கமான திங்கள்”: சிஎஸ்ஐஆர் புதிய அறிவிப்பு!

திங்கட்கிழமைகளில் ஊழியர்கள் சுருக்கமான ஆடைகளை அணிந்து வருமாறு சிஎஸ்ஐஆர் தெரிவித்துள்ளது.

கார்பரேட் கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் சாதாரண ஆடைகளை அணிந்து வரும் வழக்கம் அதாவது “கஸ்வல் ஃபிரை டே” என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆனால், திங்கட்கிழமைகளில் அலுவலகம் செல்லும் அனைவரும் தங்களது உடமைகளை சரியாக அயர்ன் செய்து அணிந்து செல்கிறார்கள். ஆனால் தற்போது, இந்தியாவின் முதன்மை ஆராய்ச்சி நிறுவனமான, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) ஊழியர்கள் திங்கட்கிழமை அயர்ன் செய்த ஆடைகளை அணிய வேண்டாம் என தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான அடையாளப் போராட்டமாக ‘விங்கிள்ஸ் அச்சே ஹை’ (WAH) என்று அழைக்கப்படும் “சுருக்கமான திங்கள்” என்னும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இது ஆற்றலை சேமிக்கும் முயற்சியாகும். அதாவது, நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் மின்சாரப் பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

சிஎஸ்ஐஆர் நாடு முழுவதும் உள்ள ஆய்வகங்களில் மின்சார பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் தொடர்ச்சியான இயக்க நடைமுறைகளை செய்து வருகிறது. ஆய்வகங்களில் மின்சார செலவினங்களில் 10% குறைப்பதே இதன் ஆரம்ப நோக்கமாகும். மின்சார பயன்பாட்டை குறைக்கும் இந்த நடவடிக்கை வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆற்றலை சேமிக்கும் வகையில் சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களில்  பணியாற்றும் ஊழியர்கள் திங்கட்கிழமைகளில் சுருக்கமான ஆடைகளை அணிந்து வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், மின்சார பயன்பாட்டை சிறிதளவு குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாய்களை பூங்காக்களுக்கு அழைத்துச் செல்கிறீர்களா?: மாநகராட்சியின் கட்டுப்பாடுகள் என்னென்ன பாருங்க?

காயத்திலும் தோனி விளையாட நிர்பந்தம் : வெளியான அதிர்ச்சி தகவல்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts