கங்கை நதியில் தங்களது பதக்கங்களை வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்த நிலையில் விவசாயிகள் சங்க தலைவர் நரேஷ் திகைத் கேட்டுக்கொண்டதால் தங்களது முடிவை மாற்றியுள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மல்யுத்த வீரர்கள் தங்களது பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி இன்று (மே 30) மாலை உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களுடன் பேரணியாக சென்றனர்.
அப்போது காவல்துறையினர் மல்யுத்த வீரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் மல்யுத்த வீரர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் சங்க தலைவர் நரேஷ் திகைத் மல்யுத்த வீரர்களை சந்தித்து பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.
மேலும் வீரர்கள் வசமிருந்த பதக்கங்களையும் அவர் வாங்கினார்.
நரேஷ் திகைத் கோரிக்கையை ஏற்று மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை திரும்ப பெற்று கலைந்து சென்றனர்.
பிரிஜ் பூஷண் சரண் சிங்கை 5 நாட்களுக்குள் மத்திய அரசு கைது செய்யவில்லை என்றால் மீண்டும் ஹரித்துவாருக்கு வந்து பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று மல்யுத்த வீரர்கள் தெரிவித்தனர்.
செல்வம்
திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு பூஜை!
சென்னையில் சூறைக்காற்று: வெதர்மேன் முக்கிய அறிவிப்பு!