மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான 10 பெண்களை தமக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா உள்ளிட்ட 200 மல்யுத்த வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்று இரவு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் சந்தித்து பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போராட்டத்தை கைவிடுமாறும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அமைச்சரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வினேஷ் போகட், “பிரிஜ் பூஷனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான 6 பெண்கள் இந்த போரட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாங்கள் அவர்களுடைய பெயர்களை தற்போது வெளியில் சொல்ல மாட்டோம்.
பாதிக்கப்பட்ட பெண்களுடன் பிரிஜ் பூஷன் மீது நாளை புகார் அளிக்க உள்ளேன். அவர் பதவியிலிருந்து விலகினால் மட்டும் போதாது.
அவரை சிறைக்கு அனுப்பும் வரை எங்களது போராட்டம் ஓயாது. நாங்கள் ஒலிம்பிக் மற்றும் உலக கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள். எனவே எங்களை சந்தேகிக்காதீர்கள்.” என்று தெரிவித்தார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மக்களவையில் 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
அவர் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோண்டா கேசர்கஞ் தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.
கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இவருக்கு அதிக செல்வாக்கு உள்ளது.
இதனால் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு பாஜக தயக்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
சென்னை பள்ளி அருகே 8 கிலோ கஞ்சா சாக்லேட்!