உலகின் அதிக மக்களை கவரும் நகரமாக பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் 5வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய டெல்லிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்ற டேட்டா அனாலிசிஸ்ட் நிறுவனம் உலகின் மிகச்சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பொருளாதாரம், தொழில், சுற்றுலா, உள்கட்டமைப்பு வசதி , சுகாதாரம் , பாதுகாப்பு உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்களை கொண்டு இந்த அளவீடு வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியலில் பாரீஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. சுற்றுலாவும், பேஷனும் பாரீஸ் முதலிடத்தை பிடிக்க காரணமாக அமைந்துள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் இரண்டாவது இடத்தையும் ஜப்பான் தலைநகர் டோக்கியோ 3வது இடத்தையும் இத்தாலி தலைநகர் ரோம் 4வது இடத்தையும் பேஷனுக்கு புகழ்பெற்ற மிலன் நகரம் 5வது இடத்தையும் பெற்றுள்ளன.
நியூயார்க், ஆம்ஸ்டர்டாம், சிட்னி , சிங்கப்பூர், பார்சிலோனா நகரங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. இந்திய தலைநகர் டெல்லிக்கு 74வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து முதல் 100 பட்டியலுக்குள் இடம் பெற்ற ஒரே நகரம் டெல்லிதான்.காற்று மாசு அதிகமாக இருந்தாலும் இந்திய தலைநகரம் பட்டியலில் இடம் பிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு அதிக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த நகரமாக பாங்காங் உள்ளது. இங்கு 3.20 கோடி மக்கள் விசிட் அடித்துள்ளனர். கோவிட் காலக்கட்டத்துக்கு பிறகு மக்கள் அதிகமாக சுற்றுலா செல்ல விரும்பியதால் சுற்றுலாத்துறை தாய்லாந்தில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது .கடந்த 2023 ஆம் ஆண்டை விட நடப்பாண்டில் பாங்காங்குக்கு சுற்றுலா வந்தவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
அடுத்ததாக, துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு 2.3 கோடி பேரும் லண்டனுக்கு 2.7 கோடி பேரும் ஹாங்காங் நகருக்கு 2.1 கோடி பேரும் மெக்கா நகருக்கு 1.9 கோடி பேரும் சுற்றுலா சென்றுள்ளனர். இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்நாள் கடமையை நிறைவேற்ற மெக்கா செல்வதால், இந்த பட்டியலில் மெக்கா இடம் பெற முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
அடேங்கப்பா… பிட்காயின் மதிப்பு இவ்வளவு உயர்ந்திடுச்சா?
சரி கமப நிகழ்ச்சி வழியாக தர்ஷினி கிராமத்துக்கு கிடைத்த பஸ் போக்குவரத்து… எப்படி?