World's most punctual airport is Bengaluru Kempegowda airport

நேரம் தவறாமை: உலகளவில் முதலிடம் பிடித்த தென்னிந்தியா விமான நிலையம்!

இந்தியா

நேரம் தவறாமையில் உலகளவில் முதலிடம் பிடித்த விமான நிலையமாக, பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் விமான சேவைகளை பகுப்பாய்வு செய்யும் நிறுவனமான சிரியம் இதை அறிவித்துள்ளது.

உலகில் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையம் என்ற அங்கீகாரத்தை, தொடர்ந்து மூன்று மாதங்களாக கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

விமானங்கள் சரியான நேரத்தில் புறப்பட்டுச் செல்வதன் அடிப்படையில் நடப்பு வருடத்தின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் இந்த சாதனையை தொடர்ந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் படைத்துள்ளது.

இந்த சாதனை பதிவுகள், ஜூலை மாதத்தில் 87.51%, ஆகஸ்ட் மாதத்தில் 89.66% மற்றும் செப்டம்பரில் 88.51% என்று அமைந்துள்ளன.

இதன் மூலம் நேரம் தவறாமையில் உலகின் முதன்மையான விமான நிலையமாக கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் தன்னை தக்கவைத்துள்ளது.

அதிலும் செப்டம்பர் 2023-ல் உச்ச அளவாக, 88.51% சரியான நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதாக, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு, சிரியம் நிறுவனத்தின் அறிக்கை பாராட்டு தெரிவித்ததுள்ளது.

88 வழித்தடங்களை உள்ளடக்கிய நெட்வொர்க் மற்றும் 35 விமான நிறுவனங்களுடனான ஒத்துழைப்புடன், தென்னிந்தியாவில் விமானப் பயணத்திற்கான முக்கிய மையமாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் தனித்து நிற்கிறது.

சிரியம் அறிக்கை வெளியானதை தொடர்ந்து கெம்பகவுடா விமான நிலையம் மற்றும் அதன் நிர்வாகத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த மூன்று மாதங்களில் நேரம் தவறாமையில், உலகளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்த மற்ற விமான நிலையங்களில் மூன்றாவது இடத்தையும் மற்றொரு தென்னிந்திய விமான நிலையமே பிடித்துள்ளது.

அது ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்.

இரண்டாம் இடத்தில் சால்ட் லேக் சிட்டி சர்வதேச விமான நிலையமும், நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் மினியாபொலிஸ் செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம் மற்றும் எல் டொராடோ சர்வதேச விமான நிலையம் ஆகியவையும் இடம்பிடித்துள்ளன.

ஏவியேஷன் அனலிட்டிக்ஸ் நிறுவனமான ‘சிரியம்’ அறிக்கைப்படி, 2021ஆம் ஆண்டில், சரியான நேரத்தில் செயல்திறனுக்கான உலகளாவிய பட்டியலில் சென்னை விமான நிலையம் 89.32% எட்டாவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: வெஜிடபிள் எக் ஆம்லெட்

போய்வா புரட்டாசியே… வா வா ஹை பசியே.: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *