நாளொன்றுக்கு ரூபாய் 1 லட்சம் வரை அகமதாபாத் ஹோட்டல்களில் வாடகை வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. Worldcup2023 hotel prices in Ahmadabad
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் வருகின்ற நவம்பர் 19-ம் தேதி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன.
20 வருடங்களுக்கு பின் இந்த இரு அணிகளும் பைனலில் மோதுவதால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் இப்போட்டி எக்கச்சக்க எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் போட்டி நடைபெறும் அகமதாபாத் நகரத்தின் ஹோட்டல்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாடகை அதிகரித்துள்ளது.
சாதாரண ஹோட்டல்களில் நாளொன்றுக்கு 10,000 ரூபாயும், ஸ்டார் ஹோட்டல்களில் நாளொன்றுக்கு 1 லட்சம் ரூபாயைத் தாண்டியும் வாடகை வாங்கப்படுகிறது.
சராசரியாக சிறிய ஹோட்டல்களில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 24,000 ரூபாய் வரை வாடகை வாங்கப்படுகிறது. அதுவே ஸ்டார் ஹோட்டல்களில் 2,15,000 ரூபாய் வரை வாடகை வாங்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 15-ம் தேதி லீக் சுற்று போட்டியில் அங்கு விளையாடிய போது ஹோட்டல் ரூம்களுக்கான டிமாண்ட் பல மடங்கு உயர்ந்தது.
அந்த வகையில் தற்போது உலகக்கோப்பை இறுதிப்போட்டி அங்கு நடைபெறுவதால் மீண்டும் ஹோட்டல் அறைகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே ஹோட்டல் உரிமையாளர்களும் நாளொன்றுக்கு 1 லட்சம் ரூபாய் வரை ரூம்களின் வாடகையை உயர்த்தி இருக்கின்றனர்.
இதேபோல அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் மேட்ச் டிக்கெட்டுகளுக்கான விலை மற்றும் அகமதாபாத் செல்வதற்கான விமான டிக்கெட்டுகளின் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை-அகமதாபாத், பெங்களூர்-அகமதாபாத் பிளைட் டிக்கெட்டுகளின் அடிப்படை விலை 15000 ரூபாயில் தொடங்கி 24000 ரூபாய் வரை செல்கிறது. இது சாதாரண நாட்களை விட 30% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. Worldcup2023 hotel prices in Ahmadabad
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
ஒரே நாளில் ரூ.520 உயர்ந்த தங்கம் விலை!
‘பிரேமம்’ இயக்குநருக்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்: உதவிய பார்த்திபன்
உருவானது ‘மிதிலி’: புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
மத்திய பிரதேசத்தில் ஆட்சிமாற்றமா?