இந்தியாவில் உலகக்கோப்பை கால்பந்து: பிரதமர் மோடி

இந்தியா

உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் மீது தான் உலகத்தின் பார்வை தற்போது உள்ளது. இந்த ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை நடத்தும் கத்தார் நாடும் தற்போது உலகளவில் டிரெண்டாகி விட்டது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலும் விரைவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் என்று கூறியுள்ளார்.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இன்று (டிசம்பர் 18) பிரதமர் மோடி ரூ.2450 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களைத் தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக, ஷில்லாங்கில் உள்ள மாநில மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர்,

”உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் வேளையில், இன்றைய இந்த விழா கால்பந்து மைதானத்தில் நடைபெறுவது தற்செயலான நிகழ்வாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒருபுறம், கால்பந்து போட்டி நடக்கிறது, அதே நேரத்தில் நாங்கள் கால்பந்து துறையில் வளர்ச்சிக்கான போட்டியை வழிநடத்துகிறோம்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இங்குள்ள மக்களின் உற்சாகம் குறையவில்லை.

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடும் சர்வதேச அணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், இளைஞர்களின் சக்தியை உறுதியாக நம்புவதாகவும், இதுபோன்ற முக்கியமான போட்டியை இந்தியா நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஒவ்வொரு இந்தியரும் அதில் பங்கேற்கும் நமது அணியை அப்போது உற்சாகப்படுத்துவார்கள்” என்று அவர் கூறினார்.

மோனிஷா

திமுக எனது உடைகள், கடிகாரம் குறித்துக் கேட்கிறார்கள்: அண்ணாமலை!

பீகாரில் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *