உலகிலேயே மெதுவான நகரம் எது என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் பெங்களூரு இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பது வைரலாகி வருகிறது.
அண்மையில் ‘ஜியோலொகேஷன் டெக்னாலஜி’ என்ற அமைப்பின் ஸ்பெஷலிஸ்ட் டாம் டாம் என்பவர் ஒரு சர்வேயை எடுத்திருக்கிறார். அவரது ரிப்போர்ட்டில், பெங்களுருவில் பீக் ஹவர்ஸில் 10 கி.மீ பயணிக்க வேண்டுமென்றால், மிகச் சரியாக 28 நிமிடங்களும் 9 விநாடிகளும் ஆகின்றன என்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதாவது, சுமார் அரை மணி நேரம். பீக் ஹவர்ஸில் சுமார் 10 கி.மீ பயணிப்பவர்கள் மட்டும் ஓர் ஆண்டுக்குச் செலவிடும் நேரம் சுமார் 129 மணி நேரமாம். ஏற்கெனவே டாம் டாம் அறிக்கையில் பெங்களூரு இந்திய அளவில் இடம்பிடித்தது. ஆனால், இப்போது உலகளவில் அதுவும் இரண்டாம் இடம் பிடித்து வைரலாகி வருகிறது.

அதேபோல், “நீளமான டிராஃபிக் ஜாமில் மட்டும்… அதாவது இந்த ரஷ் ஹவர்ஸில் மட்டும் சுமார் 974 கிலோ கார்பன் எமிஷன்கள், பெட்ரோல் கார்களிலிருந்து வெளியாகிறதாம். 2022–ல் அதிக கார்பன் மாசுவை வெளியிடுவதில் ஐந்தாவது நகரமாக இருக்கிறது பெங்களூரு” என்று பெங்களூருவின் மாசு பற்றியும் சொல்கிறது இந்த அறிக்கை.
ஐடி மக்கள், ஜாலியான மால்கள், தொழில்நுட்பத் தொழிற்சாலைகள் என்று கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உலகின் மெதுவான நகரங்களில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ள நிலையில் முதலிடத்தை லண்டன் மாநகரம் பிடித்துள்ளது. இங்கே 10 கி.மீ தூரம் பயணிக்க பீக் ஹவர்ஸில் சுமார் 35 நிமிடங்கள் ஆகுமாம்.
பெங்களூருவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் அயர்லாந்தின் தலைநகரமான டூப்ளின் நகரமும், நான்காவது இடத்தில் ஜப்பான் நாட்டின் ஸேப்போரோ நகரமும், இத்தாலியின் மிலன் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன.
ராஜ்
ராணுவ வீரர் கொலை : கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை!
டிஜிட்டல் திண்ணை: ஆம்பளையா நீ? எடப்பாடியின் ஈரோடு டென்ஷன் பின்னணி!