ஓசோன் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

இந்தியா

உலக ஓசோன் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

ஓசோன் படலத்தின் முக்கியத்துவத்தையும் பூமியை பாதுகாப்பதற்காவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஓசோன் அடுக்கு ட்ரை ஆக்ஸிஜன் மூலக்கூறால் ஆனது. தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களை உறிஞ்சும் திறன் கொண்டது.

குளோரோபுளோரோ கார்பன்கள், ஹாலோன்கள், கார்பன் டெட்ராகுளோரைடு, மெத்தில் குளோரோபார்ம் உள்ளிட்ட ஓசோனை சிதைக்கும் பொருட்களுக்கு எதிராக 1987-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாண்ட்ரீல் நெறிமுறையை நினைவுகூறும் வகையில் உலக ஓசோன் தினம் அங்கீகரிக்கப்படுகிறது.

ஓசோன் அடுக்கு என்பது பூமியின் அடுக்கு மண்டலத்திலிருக்கும் ஒரு மெல்லிய பாதுகாப்பு கவசமாகும். இந்த அடுக்கானது சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கும். மாண்ட்ரீல் நெறிமுறை வரலாற்றில் முக்கியத்துவமான ஒப்பந்தங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சர்வதேச ஒப்பந்தமானது ஓசோன் படலத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டதாகும்

இந்த ஆண்டு ஓசோன் தினத்தின் தீம் என்பது மாண்ட்ரியல் நெறிமுறையின் படி ஓசோன் அடுக்கை சரிசெய்தல் மற்றும் காலநிலை மாற்றத்தை குறைத்தல் ஆகும்.

செல்வம்

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.700 கோடி அபராதம்!

கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது நிபா வைரஸ்: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *