ஒடிசா ரயில் விபத்து: உலக தலைவர்கள் இரங்கல்!

அரசியல் இந்தியா

ஒடிசாவில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்திற்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், “ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எனது இதயபூர்வமான பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒடிசா ரயில் விபத்து குறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் கேட்டறிந்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, “ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் பலர் தங்களது விலைமதிக்க முடியாத உயிரை இழந்தது வருத்தமளிக்கிறது.

ரயில் விபத்திற்கு ஜப்பான் மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து மரணங்களின் புகைப்படங்கள் என் மனதை நொறுக்குகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நெருக்கடியான நேரத்தில் கனடா மக்கள் இந்தியர்களுக்கு துணை நிற்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தைவான் அதிபர் ட்சாய் இங் வென், “ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மீட்பு பணிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நலம்பெறுவார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், “இந்தியாவில் நடந்த கோரமான ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கூட்டம்… முன்பே எச்சரித்த பயணிகள்- அலட்சிய ரயில்வே அமைச்சர்

அலட்சியத்தால் ரயில்வே துறையை நாசமாக்கிவிட்டார்கள்: லாலு ஆவேசம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *