இந்தியாவில் செப்டம்பர் 9 -10 தேதிகளில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் ரஷ்ய அதிபரைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதில் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது; இந்தியப் பிரதமர் மோடிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது.
இதில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த குழுவினரும் இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனால், டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்திய விமானப் படையைச் சேர்ந்த ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இவற்றுடன் சேர்த்து, ஆளில்லா விமானங்களை அழிக்கும் அமைப்புகளும் பல்வேறு இடங்களில் நிறுவப்படுகின்றன.
இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டை சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அவருக்கு பதில், வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய மற்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
சமீபத்தில் சீனாவின் நிலையான வரைபடத்தின் 2023 பதிப்பை சீன அமைச்சகம் வெளியிட்டது.
அதில், அருணாசலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதி முழுவதும் சீனாவின் எல்லைக்குள் இருப்பதாக அந்த வரைபடமானது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் இரண்டு நாடுகளுக்கு மத்தியில் விவாதத்தைத் தொடங்கியது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு, ‘அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால், இத்தகைய முயற்சிகள் உண்மையை மாற்றாது.
வரைபடத்தின் மூலம் ஆக்கிரமிப்பைக் காட்டும் மனப்பான்மையை 1949ஆம் ஆண்டு முதல் சீன அரசு முன்னெடுத்து வருகிறது.
அதில் இந்தியாவின் அருணாசலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவுக்குச் சொந்தமானதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, சீனாவின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம்’ எனத் தெரிவித்தது. இந்த நிலையில்தான் G20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜி 20 மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ரஷ்யா அதிபர் புதின் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். தனக்குப் பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கலந்துகொள்வார் என்று புதின் தெரிவித்தார்.
தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது;
இந்தியப் பிரதமர் மோடிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ராஜ்
சேதமடைந்த கட்டடங்களை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை: தலைமைச் செயலாளர் உத்தரவு
வேலைவாய்ப்பு : தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!