World Hypertension Day 2024

உயர் ரத்த அழுத்த தினம்: இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள்!

இந்தியா

உயர் ரத்த அழுத்தம் (Hypertension) குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் மே 17 ஆம் தேதி உயர் ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் என பல்வேறு வகையான உடல் நலப் பிரச்சனைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

மாறிவரும் கலாச்சார உலகில் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, முறையற்ற தூக்கம் ஆகிய காரணங்களால் சில நோய்கள் நம் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாதவைகளாக மாறிப் போகின்றன.

அப்படியான ஒன்று தான் உயர் ரத்த அழுத்தம்(Hypertension). இந்த உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் பெரிதாக ஏதும் இருக்காது. பரிசோதித்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

இதில் என்னென்ன நிலை இருக்கிறது, எந்த அளவில் இருந்தால் இயல்பு நிலை என்பதைப் பார்க்கலாம்:

சிஸ்டாலிக்(systolic), டயஸ்டாலிக்(diastolic) ஆகிய இரண்டு அழுத்தங்களைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. சிஸ்டாலிக் என்பது அதிக அளவாகவும், டயஸ்டாலிக் என்பது குறைந்த அளவாகவும் பார்க்கப்படுகிறது.

 

•இயல்பான(Normal) நிலையில் சிஸ்டாலிக் 120mm Hgக்கு குறைவாகவும், டயஸ்டாலிக் 80mm Hgக்கு குறைவாகவும் இருக்கும்.

• சிஸ்டாலிக் 120-139mm Hg மற்றும் டயஸ்டாலிக் 80-89mm Hg என்ற அளவில் இருந்தால் ப்ரீ ஹைப்பர்டென்ஷன் (prehypertension) என கணக்கிடப்படும்.

• சிஸ்டாலிக் 140mm Hg அல்லது அதற்கு அதிகமாகவும், டயஸ்டாலிக் 90mm Hg அல்லது அதற்கு அதிகமாகவும் இருந்தால் அதை உயர் ரத்த அழுத்தம் (hypertension) என கணக்கிடப்படும்.

இயல்பான நிலையை தவிர மற்ற இரண்டு நிலைகளில் ரத்த அழுத்தம் இருக்கின்றது என்றால் மருத்துவரை அனுகுவது நல்லது.

உயர் ரத்த அழுத்தம் எப்படி ஏற்படுகிறது?

ரத்த அழுத்தத்தை 120/80mm Hg என்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். அதாவது குறைந்த அளவு ரத்த அழுத்தம் 80mm Hg அல்லது அதற்கும்கீழ் மற்றும் அதிக அளவு ரத்த அழுத்தம் 120mm Hg அல்லது அதற்கும்கீழ் என்ற அளவிலும் வைத்திருக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் தமனிகள் ரத்த நாளங்களின் சுவர்களை சேதப்படுத்தி தீவிர ரத்த அழுத்தத்தை உணரச்செய்யும். இதன் காரணமா அடைப்பு ஏற்பட்ட இதயத்துக்கான ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தை அனுமதிக்காது. தீவிர தாக்குதலை உண்டாக்கி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.  அதனால் உயர் ரத்த அழுத்தம் தானே என்று அலட்சியமாக இருக்கக்கூடாது.

இந்த உயர் ரத்த அழுத்ததால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதுவுமே பரிசோதித்து பார்க்காதவரை எந்த அறிகுறிகளையுமே வெளிகாட்டாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுபோன்ற காரணங்களால்தான் உயர் ரத்த அழுத்தத்தை சைலன்ட் கில்லர் என மருத்துவ வட்டாரத்தில் அழைக்கின்றனர்.

ரத்த அழுத்தத்தில் ஏற்ற தாழ்வுகளைக் குறிக்கும் சில அறிகுறிகள்:
•கடுமையான தலைவலி
•மங்கலான பார்வை
•மனதெளிவின்மையைக் குறிக்கிற ப்ரைன்ஃபாக்(Brain Fog)
•மூச்சுத்திணறல்
•எப்போதும் சோர்வாக இருப்பது
• குமட்டல்

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அனுக வேண்டும்.

உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

வயது மூப்பு, மரபியல், உடல் பருமன், உடல் ரீதியாக சுறுசுறுப்பு இல்லாமை, உணவில் அதிக உப்பு மற்றும் அதிகமாக மது அருந்துதல் போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால் இதை வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டவருவதன் மூலமாக கட்டப்படுத்த முடியும்.

•அதிக அளவிலான உப்பு , சோடியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.
•வாரம் ஒரு முறை உப்பு சேர்க்காத உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
•மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதை படிப்படியாக குறைப்பது நல்லது.
•முடிந்தவரை மனஅழுத்தம், கோபத்தை கட்டப்படுத்த நல்ல பாடல்கள் கேட்பது அல்லது யோகா போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
•உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமான ஒன்று.

உடல் ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளை தொடர்ந்து செய்வதாகும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உட்கொள்வது, தினசரி உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது, உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருத்தல், போதுமான தூக்கம், நீரேற்றத்துடன் இருப்பது மற்றும் புகையிலை, மதுவை தவிர்ப்பது ஆகியவை இதில் அடங்கும்.

இந்த சிறிய மற்றும் அத்தியாவசிய மாற்றங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, ஆற்றல் நிலைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை அதிகரிப்பதில் நீண்ட தூரம் செல்லலாம்.

பவித்ரா பலராமன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கபில் சிபல் காட்டிய டிரெய்லர்: உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தேர்தலில் வெற்றி!

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல்… 9 ’மாவட்டங்கள்’ எதிர்ப்பு! என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

இந்தியா கூட்டணி மீது மம்தாவின் திடீர் பாசம்: காரணம் சொன்ன அதிர் ரஞ்சன்

இன்றும் உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *