இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் ஐ.நா உணவுப்பணியாளர்கள் 7 பேர் மரணம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் 7 பேர் பலியானதாக உணவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய உணவுக் கலைஞர் ஜோஸ்ஆன்ட்ரெஸால் நிறுவப்பட்ட உலக மத்திய சமையலறை என்ற உணவு அறக்கட்டளையில் இணைந்து காசாவில் மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஆஸ்திரேலிய, போலந்து, இங்கிலாந்து, அமெரிக்க கனடா இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் என ஏழு பேர் இஸ்ரேல் தாக்குதலில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உடனடியாக, தாக்குதல் நடந்தப் பகுதியில் உணவு வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த தாக்குதல் திட்டமிடப்படாதது என்றும், தற்செயலாக நடைபெற்ற தாக்குதல் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார். இந்த உணவு வழங்கும் பணியாளர்கள், கடல் வழியாக 1-ம் தேதி காசாவுக்குள் நுழைந்தவர்கள், அத்தியாவசியமன உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், ஆனால், மாலைக்குள் திரும்பமுடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டதாகவும் அந்த உணவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நேற்று இரவு நடத்தப்பட்டதாகவும், இது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டிருப்பதோடு, இதற்கு முழு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
RCB vs LSG: சொந்த மண்ணில் தொடர் தோல்விகளை சந்திக்கும் பெங்களூரு
பியூட்டி டிப்ஸ்: வேனல் கட்டியிலிருந்து விடுதலை பெற…
ஹெல்த் டிப்ஸ்: கோடையில் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!