மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த வெளியீட்டில், வேர்ட்பேட் (Wordpad) முற்றிலுமாக நீக்கப்படும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அலுவலக வேலைகள் பலவற்றிலும் முக்கிய பங்கினை வகித்துக் கொண்டிருக்கிறது ‘மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்’ஸின் வேர்ட்பேட். இந்த நிலையில், மைக்ரோசாப்ஃப்ட் நிறுவனம் ஒரு திடீர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ‘Microsoft Wordpad’-ஐ கூடிய விரைவில் நிறுத்தப் போவதாகவும், அடுத்த அப்டேட்டின்போது அதை முற்றிலுமாக எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளது.
இப்போது வேர்ட்பேட்டை விஞ்சிய பல்வேறு சாஃப்ட்வேர்கள் வந்துவிட்டாலும், இப்போது பயன்படுத்தக்கூடிய மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் அனைத்துக்கும் அடித்தளம் வேர்ட்பேட். 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக்கொண்டிருந்த செயலி, சமீபகாலமாக அதிகமாக மக்களால் பயன்படுத்தப்படவில்லை என்பதால் அதை நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.
வின்டோஸ் 95-ன் ஒரு பகுதியாக இருந்த வேர்ட்பேட்டின் புழக்கம் மக்கள் மத்தியில் தற்போது குறையத் தொடங்கி, மக்கள் புதிது புதிதாக வரக்கூடிய நவீன கருவிகளையே பயன்படுத்த விரும்புகின்றனர். எனவே, மைக்ரோசாப்ஃப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘Wordpad’ இனி புதுப்பிக்கப்படாது. Microsoft-ன் அடுத்த வெளியீட்டில், மைக்ரோசாஃப்ட் வேர்டுபேட் முற்றிலுமாக நீக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
வின்டோஸ் 7 அறிமுகப்படுத்தியபோதுவேர்ட் பிராஸசரில் பெரிதளவில் மாற்றங்கள் கொண்டு வந்தனர். பிறகு வின்டோஸ் 8-ல் சிறிய புதுப்பிப்பு நடந்தது. இருப்பினும், மக்கள் மத்தியில் இது பெரிதாக வரவேற்கப்படவில்லை. மேலும், ‘Microsoft Copilot’ என்ற புதிய ‘AI Supporter’, இப்போது மைக்ரோசாஃப்ட்டால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வின்டோஸ் 11 23H2- விரைவில் வரவிருக்கிறது. அடுத்தடுத்து மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தவிருக்கும் அப்டேட்டுகளில், புதிய ‘AI’ கண்டுபிடிப்புகளான ‘Bing AI’ போன்றவற்றை எதிர்பார்க்கலாம் என்றும் அந்த நிறுவனம் கூறி வருகிறது.
ராஜ்
ஜி-20 மாநாடு தீர்மானத்துக்கு இடையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!
தூய்மைப் பணியாளர்களின் மாத சம்பளத்தை முறைப்படுத்த கோரிக்கை!