ராஜஸ்தானில் தேசிய மகளிர் தினத்தன்று மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேசிய மகளிர் தின கொண்டாட்டத்திற்காக ராஜஸ்தான் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 8 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள அனைத்து பெண்களும், பெண் குழந்தைகளும் மாநில பேருந்துகளில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநில முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.
சாதாரண கட்டணப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள் என அனைத்து பேருந்துகளிலும் அன்றைய தினம் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம். மார்ச் 8 ஆம் தேதியன்று சுமார் 8.50 லட்சம் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதனால் சுமார் 7.50 கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகையை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் உயர்த்துவதற்கும் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
இது ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்குக் கட்டணம் இல்லா பயணசீட்டு அறிவிக்கப்பட்டுக் கடந்த ஓராண்டு காலமாகப் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
தோனியிடம் கற்றுக்கொண்டது என்ன? ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளசிஸ்
2024 தேர்தலுக்கு ப்ளூ பிரின்ட் இதுதான்: இந்தியாவுக்கு ஸ்டாலின் பர்த் டே மெசேஜ்!