மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று (செப்டம்பர் 20) மக்களவையில் நிறைவேறியது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கி 8 மணி நேரம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கனிமொழி உள்ளிட்ட 60 எம்.பிக்கள் பேசினர்.
இதில் ஓபிசி பிரிவினரையும் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 பேர் ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் எதிராக வாக்களித்தனர்.
அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதால், மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை எனும் நிலையில், வாக்கெடுப்பில் இந்த மசோதா பெரும்பான்மை பெற்று நிறைவேறியது.
வாக்குச்சீட்டின் மூலம் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.
இந்த மசோதாவுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித்தலைவரும் ஹைதராபாத் எம்.பியுமான அசாதுதீன் ஓவைசி ஆதரவளிக்கவில்லை. ஓபிசி-இஸ்லாமியப் பெண்களுக்கு மட்டும் அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்து எதிர்ப்புத் தெரிவித்தார்.
பிரியா
அசத்தலான கேமரா தரத்தில் VIVO V29 மற்றும் VIVO V29 PRO
பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்ட நீட் கட் ஆப்!