சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று (செப்டம்பர் 19) தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு அளித்திருந்தது.
இந்தநிலையில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது.
முன்னதாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “வாஜ்பாய் ஆட்சியின் போது பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பல முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மசோதாவை நிறைவேற்ற போதுமான பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை முன்னெடுத்து செல்ல கடவுள் எனக்கு வாய்ப்பளித்துள்ளார். இரு அவைகளிலும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மசோதாவை எங்கள் அரசு கொண்டுவர உள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
உடைந்த கூட்டணி: போஸ்டர் ஒட்டி மோதும் அதிமுக – பாஜகவினர்!
மகளிர் உரிமைத் திட்டம்: இன்று முதல் உதவி மையங்கள்!