உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில் தொழிலாளர் சக்தியின் ஒரு பகுதியாக இருக்கும் பெண்களின் பங்கு அரை நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததை விட இன்று அதிகமாக உள்ள நிலையில் இந்தியாவில் தொழில்துறையில் பெண்களின் பங்கேற்பு 37% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, ‘2023ஆம் ஆண்டில் நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4.2 சதவிகித அளவுக்கு மேம்பட்டு 37 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
பெண்களுக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் காரணமாக, இந்த விகிதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துள்ளது.
கடந்த 2017-18ஆம் ஆண்டில் 23.3 சதவிகிதமாக இருந்த பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம், 2018-19ஆம் ஆண்டில் 24.5 சதவிகிதமாகவும், 2019-20ஆம் ஆண்டில் 30 சதவிகிதமாகவும், 2020-21ஆம் ஆண்டில் 32.5 சதவிகிதமாகவும், 2021-22ஆம் ஆண்டில் 32.8 சதவிகிதமாகவும், 2022-23ஆம் ஆண்டில் 37 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
டொவினோ தாமஸா இது?: ரசிகர்கள் ஷாக்!