தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு போய்விட்டதாக அதிமுக , பாரதிய ஜனதா கட்சிகள் கண்டனக் குரல்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தொடர்ந்து பாஜக ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தில் துப்பாக்கி தயாரிக்கும் தொழில் குடிசைத் தொழில் போல நடந்து வருகிறது. இதுபற்றிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சி செய்து வருகிறது. ஆனால், இந்த மாநிலத்தில்தான் சட்ட விரோத ஆயுத உற்பத்தி அமோகமாக நடக்கிறது. இதற்கு , உதாரணமாக சமீபத்தில் பரவிய வீடியோ ஒன்றை சுட்டி காட்டலாம்.
அந்த வீடியோவில் பெண் ஒருவர் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சர்வ சாதாரணமாக கைத்துப்பாக்கிகளை கழுவி கொண்டிருப்பதை காண முடிகிறது. மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள மொரினோ என்ற மாவட்டத்தில் இருந்து இந்த வீடியோ பரவியது தெரிய வந்தது.
இதையடுத்து, மொரினோ மாவட்ட போலீசார் உஷாரானார்கள். தொடர்ந்து, மொரினா மாவட்டத்தில் சல்லடையாக போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முடிவில் அங்குள்ள கணேஷ்புரா என்ற கிராமத்தில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் செய்யும் தொழிற்சாலையை கண்டுபிடித்தனர்.
இங்கிருந்து 6 கைத்துப்பாக்கிகள், அரையும் குறையுமாக செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஆயுதங்கள், இயந்திரங்கள் , கருவிகளையும் மவுயா காவல் நிலைய போலீசார் கைப்பற்றினர்.
கடந்த 6 மாதங்களாக சட்ட விரோத ஆயுத ஃபேக்டரி நடத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக கை துப்பாக்கியை கைக்குழந்தை போல கழுவிய அந்த பெண்ணின் கணவர் சக்தி கபூர் மற்றும் அவரின் தந்தை பிஹார்லால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிஹர்லால் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சக்திகபூரிடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-எம்.குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எஸ்சி பட்டியலை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்களா? ரவிக்குமார் ஷாக்!
இந்தியை எதிர்த்து விட்டு, பாலிவுட்டில் நடிக்கலாமா? தன்னை தானே கேட்டுக் கொண்ட கீர்த்தி சுரேஷ்