மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பி.டி ஆசிரியையான பிரியா லஸ்காரே என்பவர் ஷிரடி நோக்கி பேருந்தில் இன்று (டிசம்பர் 20) பயணித்துக் கொண்டிருந்தார்.
அங்குள்ள பள்ளியில் அவர் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பேருந்தில் பயணித்த குடிகாரர் ஒருவர் பிரியாவிடத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பல முறை அவரிடத்தில் இருந்து விலகினாலும் அந்த மனிதர் விடாமல் தொல்லை தந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த பிரியா, அந்த மனிதருக்கு பாடம் புகட்ட முடிவு செய்தார்.
சில்மிஷத்தில் ஈடுபட்ட மனிதரின் காலரை பிடித்து கன்னத்தில் அடித்து கொண்டே இருந்தார். நிறுத்தவே இல்லை. மொத்தம் 26 முறை அந்த மனிதருக்கு கன்னத்தில் அறை விழுந்தது. பின்னர், பேருந்து கண்டக்டரும் அந்த குடிகாரருக்கு சில அடி போட்டார்.
தொடர்ந்து, பேருந்து அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு சென்றது. காவல் நிலையத்தில் போலீசார் யாரும் இல்லை.
சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்தனர். இந்த சமயத்தில், அந்த குடிகார மனிதரின் மனைவி பிரியாவின் காலில் விழுந்து தன் கணவர் மீது போலீசில் புகார் கொடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, மனம் இறங்கிய பிரியா, அந்த மனிதரை மன்னித்து விடுவித்தார். புகார் அளிக்கப்படாததால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
பிரியா கொடுத்த அடியை அந்த மனிதரால் வாழ்க்கைக்கும் மறக்க முடியாது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
வெளியான விடுதலை 2 : அடுத்த நிமிடமே நடந்த சம்பவம்!
“ஒன்றிய அரசை பார்த்து கீச்சு குரலில் கூட பேச முடியல” : எடப்பாடியை கிண்டல் செய்த ஸ்டாலின்
Comments are closed.