கடந்த 2022 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது நண்பர் வர்த்திக் திஹாராவுடன் இணைந்து ஒன்8 கம்யூன், என்ற ரெஸ்டாரன்டை நிறுவினர். இந்த உணவங்கள் டெல்லி, புனே, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் இயங்கி வருகின்றன “ஒன்8” என்ற வார்த்தை கோஹ்லியின் ஜெர்சி எண் 18ல் இருந்து பெறப்பட்து.
இந்த நிலையில் ஹைதரபாத்தை சேர்ந்த ஸ்னேஹா என்ற பெண் விராட் கோலியின் ஒன் 8 கம்யூனில் போய் கார்ன் கோப் என்ற உணவை சாப்பிட்டுள்ளார் . பில்லை பார்த்ததும் அதிர்ந்து போனார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ஒன்8 கம்யூனில் “பூட்டா” என்ற கார்ன் கோப் சில துண்டுகளுக்கு ரூ. 525 ரூபாய் செலுத்தினேன் என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவை 11.7 ஆயிரம் பேர் லைக் செய்திருந்தனர்.
சினேகாவைப் போலவே, பல வாடிக்கையாளர்கள் விலையைப் பார்த்ததும் திகைத்துப் போனார்கள். அவரது எக்ஸ் தள பதிவை பார்த்த பிறகு, சிலர் அந்த உணவுக்கு அதிகமாக செலவழித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும், ஆடம்பரமான உணவகங்கள் உணவுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த சேவைக்கும் கட்டணம் வசூலிக்கின்றன என்றும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
விராட் கோலி உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டாம். நியாயமான விலைக்கு விற்கலாமே என்று நெட்டிசன்கள் பேசிக் கொள்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்