இந்தியாவில் அதிகம் மது அருந்தும் பெண்கள் வாழும் மாநிலங்களின் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அஸ்ஸாம் மாநிலத்தில்தான் இந்தியாவில் அதிக மது அருந்தும் பெண்கள் உள்ளனர். woman most Consumes Alcohol
இந்திய மக்கள் தொகையில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் தேசிய அளவில் 1.2 சதவிகிதம் பேர்தான் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள். இதுவே அஸ்ஸாமில் 16.5 சதவிகிதமாக உள்ளது.
மேகாலயாவில் 8.7 சதவிகிதம் பெண்கள் மது அருந்துகின்றனர். அருணாச்சல பிரதேச மாநிலம் 3-வது இடத்தை பிடிக்கிறது.
இந்த மாநிலத்தை சேர்ந்த ஆண்கள்தான் இந்தியாவிலேயே அதிகம் மது அருந்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு 15 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்களில் 59 சதவிகிதம் பேர் மது அருந்துகின்றனர். குளிரான காலநிலைதான் இங்குள்ள ஆண்கள், பெண்களை மதுவை நாட செய்வதாக கூறப்படுகிறது.
சிக்கிம் 4-வது இடத்திலும் சத்தீஸ்கர் 5-வது இடத்திலும் உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா போன்ற கார்ப்பரேட் கல்ச்சர் கொண்ட மாநிலங்கள் கூட இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் 3.3 சதவிகிதம் பெண்கள் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். 2024 ஆம் ஆண்டு அதுவே 1.3 சதவிகிதமாக குறைந்துள்ளது. woman most Consumes Alcohol