டிரைவரை முழங்காலிட வைத்து செருப்பால் அடித்த முன்னாள் முதல்வரின் மகள் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் பிரஃபுல்லா குமார் மகந்தாவின் மகளிடத்தில் டிரைவராக ஒருவர் நீண்ட காலமாக வேலை பார்த்து வருகிறார். திஷ்பூரிலுள்ள முதல்வரின் மகள் வீட்டில் அந்த டிரைவர் பணியில் இருந்துள்ளார். எந்த நேரமும் குடிபோதையில் இருந்துள்ள அவர், மகந்தாவின் மகளை தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். woman hits driver with slipper
பல முறை கண்டித்தும் டிரைவர் திருந்தியபாடில்லை. ஒரு கட்டத்தில் அதிக கோபமடைந்த முன்னாள் முதல்வரின் மகள், மற்ற ஊழியர்களின் உதவியோடு அந்த டிரைவரை முழங்காலிட வைத்துள்ளார். பின்னர், செருப்பால் கண்டபடி அடித்துள்ளார். இதை வீடியோ எடுத்து ஒருவர் இணையத்தில் பதிவிட வைரலானது.
இணையத்தில் இந்த வீடியோ பரவியதையடுத்து, அந்த டிரைவர் தகாத முறையில் நடந்து கொண்டால் , போலீசில் புகார் அளிக்க வேண்டியதுதானே… அதை விடுத்து பலர் முன்னிலையில் செருப்பால் அடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். woman hits driver with slipper
இந்த சம்பவம் திஷ்பூர் எம்.எல்.ஏ ஹாஸ்டல் அருகேயுள்ள பங்களாவில் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது, பிரஃபுல்லா குமார் மகந்தா எம்.எல்.ஏவாக கூட இல்லை. ஆனாலும், அவர் குடும்பத்தாரும் எம்.எல்.ஏக்கள் குடியிருப்பில் தொடர்ந்து வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
1985 – 90 வரையிலும் 1996- 2001 வரையிலும் என இரு முறை பிரபஃபுல்லா குமார் மகந்தா அஸ்ஸாம் மாநில முதல்வராக இருந்துள்ளார். woman hits driver with slipper