Will Vikram Lander wake up

கண் விழிக்குமா விக்ரம் லேண்டர்: செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளா?

இந்தியா

ஒட்டு மொத்த உலக நாடுகளும் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியா தனது சந்திராயன் – 3 விண்கலம் மூலமாக நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து உலகையே திரும்பி பார்க்க செய்தது.

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திராயன் – 3 ன் விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வினை தொடங்கியது.

சுமார் 100 மீட்டர் வரை  வெற்றிகரமாக ஆய்வு செய்து வந்த நிலையில்,

நிலவின் தென் துருவத்தில் இரவு தொடங்கியதால் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் சூரிய ஒளியின் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு உறக்க நிலைக்கு அனுப்பப்பட்டது.

ஒரு சந்திர நாள் என்பது பூமியின் 14 நாட்கள். விக்ரம் லேண்டர் தொடர்ந்து ஆய்வு செய்து நிலவின் வெப்பநிலை, இரும்பு, சல்பர், ஆக்சிஜன் போன்ற தனிமங்கள் இருப்பதையும் இந்த ஆய்வில் உறுதி செய்த நிலையில், நிலவில் தென் துருவத்தில் இரவு தொடங்கியது.

நிலவில் இரவு நேரத்தில் -200 முதல் -250 டிகிரி செல்சியஸ் வரை கடும் குளிர் நிலவும்.

இதனால் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் செயல்பட முடியாது என்பதால் (கடும் குளிரை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படாததால்) கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி உறங்க வைக்கப்பட்டது.

செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நிலவில் தென் துருவத்தில் பகல் பொழுது தொடங்கியதால், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை செயல்பட வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்பு கொண்டனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தற்போதுவரை விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை.

மீண்டும் செயல்பட வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலவில் தென் துருவத்தில், சந்திராயன் – 3 திட்டத்தின் நோக்கம் ஏற்கனவே வெற்றி அடைந்து விட்டதாகவும்,

இந்த கருவிகள் கடும் குளிரில் தனது செயல் திறனை தக்க வைத்துக் கொண்டால் 50 சதவிகிதம் வரை மீண்டும் செயல்பாட்டை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

செப்டம்பர் 30 ஆம் தேதி மீண்டும் நிலவின் தென் துருவத்தில் இரவு தொடங்குகிறது.

அதுவரை விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை தொடர்பு கொள்ளும் முயற்சிகள் தொடரும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பவித்ரா பலராமன்

ராணுவ வீரரை கைது செய்த கேரள போலீசார்: பின்னணி என்ன?

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு திமுகவின் சதி: ஜான் பாண்டியன்

+1
1
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0