ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்: இந்தியாவில் தொடருமா?

இந்தியா

உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக, கூகுள், அமேசான், மெட்டா, ட்விட்டர் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

மெக்சிகோ, கனடா, பிரேசில், உருகுவே உள்ளிட்ட மேற்கத்திய கார்ப்பரேட் உலகில் கடந்த சில மாதங்களாக பணிநீக்க நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அதிகளவில் வருகின்றன.

அந்தவகையில், சமீபத்தில் கூகுள் நிறுவனம் அதன் 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

will global layoffs jolt indias it industry

மேலும் கூகுள் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கக்கூடிய பணியாளர்கள் மற்றும் மூத்த பணியாளர்களுக்கு தங்களுடைய வருடாந்திர போனஸில் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது உலகம் முழுவதும் குகூள் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கைகள் குறித்த பேசு பொருளாக மாறியுள்ளது.

வேலைவாய்ப்பு தகவல்களை வெளியிடும் Crunchbase நிறுவனம், இந்த மாதத்தின் முதல் 20நாட்களில் 46,000பேர் உலகம் முழுவதும் வேலையை இழந்துள்ளனர் என்றும் கடந்த ஆண்டு பொது மற்றும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் 1,07,000பேரை பணிநீக்கம் செய்ததாகவும் தெரிவித்துள்ளது.

will global layoffs jolt indias it industry

பொதுவாக, மேற்கத்திய நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் போது தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்கம் பற்றிய அறிவிப்புகளை வெளியிடும். ஆனால் இந்தியாவில் இதுபோன்ற, அதிகப்படியான பணிநீக்க நடவடிக்கை இதுவரை நடைபெறவில்லை.

இந்திய ஐடி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வதை விட பணியமர்த்துதலில் திட்டமிட்டு செயல்படுவதாக சியெல் நிர்வாக இயக்குனர் ஆதித்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,

“இங்குள்ள ஐடி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மந்தநிலை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ளும் வகையிலான பணியாளர்களை மட்டுமே பணி அமர்த்துகிறது.

மேற்கத்திய நாடுகளில் அதிகப்படியான பணியாளர்களை பணி அமர்த்துகிறார்கள். இதனால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் போது பணி நீக்க நடவடிக்கைகள் ஏற்படுகிறது.” என்றார்.

இந்திய நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்தாமல் இருப்பதற்கான இரண்டு காரணங்களை டிவிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி பாலாஜி குறிப்பிடுகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “பணி நீக்க நடவடிக்கைகளால் நிறுவனத்தின் நற்பெயரை இழக்க நேரிடுமோ என்ற பயம் ஏற்படும் மற்றும் இந்தியாவில் உள்ள தொழிலாளர் சட்டங்கள் பணி நீக்க நடவடிக்கைகளை அனுமதிப்பதில்லை.

கலாச்சார ரீதியாக மேற்கத்திய நாடுகள் அதிக பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. அங்கு தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக இல்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் 2008-2009 ஆகிய காலகட்டங்களில் மட்டும் தான் இந்தியாவில் பணி நீக்க நடவடிக்கைகள் ஏற்படாமல் இருந்தது.

அதன் பிறகு உலக நிதி நெருக்கடியால் தொழில்துறைகளில் 5லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.” என்றார்.

உலகம் முழுவதும் பணி நீக்க நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலிக்குமா என்ற அச்சத்தில் ஐடி தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

செல்வம்

குடியரசு தினம்: ஆளுநர் வாழ்த்து!

விதிமுறைகளை மீறிய நம்பர் பிளேட்: போலீசார் அதிரடி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.