என்.சந்திரசேகரன் போட்ட பிளான்… டாடா செய்த மாயம்… வாயடைத்த ரிசர்வ் வங்கி!

Published On:

| By Kumaresan M

இந்தியாவின் பழைமையான தொழில் குழுமமான டாடா சன்ஸ் உப்பு முதல் இரும்பு வரை பல பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

டாடா சன்ஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் பல நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால், 410 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட டாடா சன்ஸ் குழுமம் பட்டியலிடப்படாத நிறுவனமாகவே தொடருகிறது. அதாவது, தனியார் நிறுவனமாகவே இருந்து வருகிறது.

டாடா சன்ஸ் குழுமத்தின் பங்குகள் தொராப்ஜி டாடா அறக்கட்டளைக்கு 28% பங்கும், ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு 24% பங்கும் உள்ளன.18.4 சதவிகித பங்குகள் மிஸ்திரி குடும்பத்திடம் உள்ளன. மற்றவை டாடா குழும நிறுவனங்களிடத்தில் உள்ளன.

ஆனால், ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின்படி, டாடா சன்ஸ் குழுமம் கட்டாயமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டியிருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தை ஒரு வங்கி சாரா நிதி நிறுவனமாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

வங்கிகளிடம் டாடா சன்ஸ் 20 ஆயிரம் கோடிக்கு அதிகமான கடன்கள் வாங்கியிருந்தது. இந்த கடன்களை அடைக்கவில்லையென்றால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்  டாடா சன்ஸ் நிறுவனம் கட்டாயமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும்.

ஆனால், டாடா சன்ஸ் நிறுவனமோ தொடர்ந்து பட்டியலிடப்படாத நிறுவனமாகவே தொடர விரும்பியது. இந்த கட்டாயத்தில் இருந்து விடுபடுவதற்காக, டாடா சன்ஸ் நிறுவனம் ரூ.20,300 கோடி ரூபாய் கடன்களை அடைத்துள்ளது. இனி ,  டாடா சன்ஸ் தொடர்ந்து பட்டியலிடப்படாத நிறுவனமாகவே இயங்க முடியும்.

டாடா சன்ஸ் அறக்கட்டளை தலைவராக நாமக்கல்லை சேர்ந்த என்.சந்திரசேகரன் உள்ளார். இவர் தலைவரான பிறகுதான், ஏர் இந்தியா வாங்கப்பட்டது. தற்போது, ரிசர்வ் வங்கி போட்ட திட்டத்தையும் முறியடித்து டாடா சன்ஸ் குழுமத்தையும் தனியார் நிறுவனமாகவே தொடர்ந்து இயங்க வழி வகை செய்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

விமர்சனம்: ஃபுட்டேஜ்!

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘லப்பர் பந்து’ : ரிலீஸ் எப்போ தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment