புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்குக் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவரை அழைக்காதது ஏன் என்ற கேள்விக்கு மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜகதீப் தங்கார் விளக்கமளித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
நேற்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின் போது, புதிய நாடாளுமன்றம் அழகாக இருக்கிறது. ஆனால் நாட்டின் முதல் குடிமகள் குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை என்று கூறியிருந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
இந்நிலையில் 4ஆம் நாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (செப்டம்பர் 21) நடைபெற்ற போது மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி வேணுகோபால்,
“இரு முக்கியமான நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஒன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா.
இதற்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
உங்களுக்கும் அழைப்பு இல்லை. மாநிலங்களவைத் தலைவராக நீங்கள் இல்லாதது எங்களை அவமதிப்பது போல் இருந்தது” என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தங்கார்,
“அரசியல் சாசனத்தில் குடியரசுத் தலைவருக்கும், துணை குடியரசுத் தலைவருக்கும் மிக உயர்ந்த இடம் வழங்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் முதல் கூட்டத்தொடரின் முதல் நாள் மட்டுமே வந்து உரையாற்றுவார்.
அதன் அடிப்படையில் அவர் நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு வரவில்லை. துணைக் குடியரசுத் தலைவருக்கும் குடியரசுத் தலைவருக்கும் நாட்டில் மிக உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மீறல் எதுவும் நடக்கவில்லை.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதுகுறித்து பேசும்போது முறையான அனைத்து தகவல்களையும் அறிந்து பேச வேண்டும்.
குடியரசுத் தலைவருக்கும், துணை குடியரசுத் தலைவருக்கும் அரசியலமைப்பு ரீதியான பொறுப்புகள் எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை முதலில் ஹோம் வொர்க் செய்து தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அரசியலமைப்பைப் படிக்கவும் என்று அறிவுரையாகக் கூறியுள்ளார்.
பிரியா
கார் ஒட்டுநர் வங்கிக் கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி : என்ன நடந்தது?
காலாண்டு தேர்வெழுதும் நாங்குநேரி சின்னதுரை
துணை குடியரசுத் தலைவர் அளித்துள்ள இந்த பதில் வரவேற்கத்தக்கது…. அதேபோன்று மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆளுநர்களுக்கும் பொருந்தும் அல்லவா அரசியல் சாசன சட்டம் ஆளுநருக்கு எந்த மாதிரியான அதிகாரம் வழங்கியுள்ளது என்று…..