”நெடுஞ்சாலையை ஏன் திறந்து வைத்தார்”: பிரதமரை சாடிய காங்கிரஸ்!

Published On:

| By Monisha

மைசூர்-பெங்களூரு விரைவுச்சாலை கட்டமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

கர்நாடக மாநில மைசூர்-பெங்களூரு விரைவுச்சாலை 118 கிலோ மீட்டர் தொலைவில் மொத்தம் ரூ.8,480 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. என்.எச் 275 மைசூர்-பெங்களூரு விரைவுச்சாலை ஆறு வழிச்சாலையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலை மூலமாகப் பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 75 நிமிடங்களாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்நிலையில் மைசூர் பெங்களூரு விரைவுச்சாலையின் கட்டமைப்பு பணிகள் இன்னும் முழுமையாகாமல் இருப்பதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

கர்நாடகாவின் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “முழுமையற்ற பெங்களூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை திறப்பு விழா டோல் வசூலில் ₹ 25,000 கோடி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது அறிக்கையில், “அடுத்த கர்நாடகா தேர்தலில் முழுமையான அழிவை சந்திக்கவிருக்கும் பாஜக அரசு தொடர்ந்து நிலைத்திருக்க ஒவ்வொரு விளம்பர முயற்சியையும் மேற்கொள்கிறது.

முழுமையற்ற தேசிய நெடுஞ்சாலையைத் திறப்பதற்கான விரக்தி, பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து, கன்னடர்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிப்பது, பழுதடைந்த சாலை வடிவமைப்பு, தடை செய்தல் உள்ளிட்ட முக்கியக் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், கர்நாடக பாஜக அரசும் பதிலளிக்க வேண்டும்.

இயற்கையான நீரின் ஓட்டம், வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாதது மற்றும் விவசாயிகளுக்கு அவர்களின் சொந்த நிலத்தை அணுக முடியாத வகையில் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது.

பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையின் 21 கிமீ இன்னும் பல்வேறு இடங்களில் முழுமையடையாமல் இருக்கிறது. 34 பாதாள சாக்கடைகளில் 22 மட்டுமே நிறைவடைந்துள்ளது. 12 பாதாள சாக்கடைகளில் 6 பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது.

விவசாயிகளுக்கு உரிய நீர்ப்பாசன வசதிகளை உறுதி செய்யாமல், உரிய வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பிரதமர் மோடி தேசிய நெடுஞ்சாலையை ஏன் திறந்து வைக்கிறார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மோனிஷா

புலம்பெயர் தொழிலாளர்கள் வதந்தி: கைதான ஜார்கண்ட் இளைஞர் மீது நடவடிக்கை!

டிஜிட்டல் திண்ணை: அழைத்தார் எடப்பாடி.. என்ன சொன்னார் வைத்திலிங்கம்? என்ன செய்கிறார் ஓபிஎஸ்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel