வேலைவாய்ப்பு வழங்கும் உலகின் முன்னணி வேலைவாய்ப்பு இணைய தளமான இண்டீட் (Indeed) நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைத் தலைமை இடமாக கொண்டு இயங்கும் இண்டீட் நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால் தங்கள் நிறுவனத்தின் 8% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்ஹைம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், கொரோனா பரவல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக பல நிறுவனங்களும் தங்களின் புதிய பணியாளர்கள் நியமிப்பதை வெகுவாக குறைத்து வருகிறது என்றும் அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் பெரும் நெருக்கடியான நிலையை சந்தித்து வருவதால், அந்த நிறுவனங்களும் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் தங்கள் நிறுவனம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகவும், இதனால் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க வேண்டியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலை தேடல் தளமான இண்டீட் நிறுவனம் கடந்த ஆண்டு 2,200 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது இண்டீட் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 15 சதவிகிதம் ஆகும்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: வெயிலில் போய்விட்டு வீடு திரும்பியதும் இதெல்லாம் செய்யாதீர்கள்!
என்னென்ன சொல்றாரு பாருங்க: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: வருகிறது உள்ளாட்சித் தேர்தல்…
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழக்கறிஞர்களுக்கு பொருந்தாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!