இந்தியாவுக்கு ரகசியமாக வந்து பிரிட்டன் மன்னர் இரண்டாம் சார்லஸ் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 12 நாட்களாக பிரிட்டன் மன்னர் சார்லஸ் ஆஸ்திரேலியா மற்றும் சாமோ நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உடன் ராணி கமில்லாவும் சென்றிருந்தார் . மன்னர் சார்லசுக்கு புற்று நோய் இருப்பது தெரிய வந்த பிறகு, முதன் முதலாக இந்த இரு நாடுகளுக்குதான் சார்லஸ் பயணம் மேற்கொண்டார். சாமோ நாட்டில் சுற்றுப்பயணம் முடித்த பிறகு, மன்னர் சார்லஸ் அங்கிருந்து அக்டோபர் 27 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தார்.
பெங்களுருவிலுள்ள Soukya International Holistic Health Centre என்ற சிகிச்சை மையத்தில் அவர் மனைவியுடன் தங்கியுள்ளார். உடல் நிலை சிகிச்சைக்காக வந்ததாக தெரிகிறது. மேலும், இது முற்றிலும் அவர்களின் தனிப்பட்ட பயணம் என்பதால், அரசு முறையில் எந்த மரியாதையும் அளிக்கப்படவில்லை. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் யாருடனும் அவர்கள் உரையாடவும் இல்லை. இங்கு சார்லஸ் மற்றும் கமீலா யோகா உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு தங்களை ரெஃப்ரெஷ் செய்து கொண்டுள்ளனர்.
இந்த மையத்துக்கு சார்லஸ், கமீலா தம்பதி வருவது முதன்முறையல்ல. இதற்கு முன்பு பல முறை அவர்கள் வந்து சென்றுள்ளனர். இந்த மையத்தில்தான் சார்லஸ் தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கு, யோகா, ஆயுர்வேதம் , இயற்கை மருத்துவம், ஹோமியோபதி , அக்குபஞ்சர் உள்ளிட்ட பல சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. பாலிவுட் பிரபலங்கள், ஹாலிவுட் பிரபலங்கள் , வளைகுடா மன்னர்களின் குடும்பத்தினர் இங்கு ரகசியமாக வந்து கிசிச்சை மேற்கொள்வது உண்டு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கங்குவா பட எடிட்டர் திடீர் மரணம்… என்ன நடந்தது?
“ஒரே ஆண்டில் இரு தேர்தலில் வென்றவர் முத்துராமலிங்க தேவர்: பசும்பொன்னில் எடப்பாடி மரியாதை!