பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் ஃபானி. இவர், யுடியூப் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில், 23 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இந்த நிலையில், துபாயில் இருந்து ஃபானி சீனாவுக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் சீனாவை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், ‘சீனாவுக்கு வந்தவுடன் எனக்கு விரும்பத்தகாத அனுபவம் ஏற்பட்டது. இந்த நாட்டில் தாங்க முடியாத நாற்றம் அடிக்கிறது. இது எனக்கு குமட்டலை ஏற்படுத்தியது. துபாயிலிருந்து வந்ததில் இருந்து சீனாவில் தங்கியிருந்த காலம் முழுவதும் துர்நாற்றத்தை அனுபவித்தேன். எனினும், அந்த நாட்டில் வாழ்ந்ததால் அதற்கு பழகி விட்டேன். சில ஐரோப்பிய நாடுகளிலும் இதே போன்ற துர்நாற்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டது’ என்று கூறியிருந்தார்.
டாக்டர். ஃபானியின் வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து பலரும் எதிர்வினையாற்றினர். நெட்டிசன் ஒருவர், தான் பல ஆண்டுகள் சீனாவில் வசித்ததாகவும், அந்த நாடும் நாட்டு மக்களும் அத்தனை சுத்தமாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், ‘எந்த நாட்டையும் தவறாக பேச வேண்டாம். ஐரோப்பிய மக்கள்தான் மற்றவர்களை மற்ற நாட்டினரை குறை சொல்வார்கள். நீங்கள் அந்த நாட்டில் இருக்கிறீர்கள். அந்த நாட்டை மதிக்கவும். 10 ஆண்டுகளுக்கு மேலாக சீனாவில் வசிக்கிறேன். நீங்கள் சொல்வதை நான் பொய் என்று சொல்வேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மற்றொரு நெட்டிசன்,’ இது அடிப்படையில், ஒரு பெரிய பொய். நான் இரண்டு வருடங்களாக சீனாவில் வசித்து வருகிறேன், இவர் சொல்வது போல துர்நாற்றத்தை நான் அனுபவித்ததில்லை. சீன மக்கள் நன்கு படித்தவர்கள், சுத்தமானவர்கள்’ என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்