ஒத்தையா நின்று தோற்பதை விட, கை கோர்த்து வாழலாம்!- நிஸ்ஸான், ஹோண்டா இணைய 5 காரணங்கள்!

Published On:

| By Kumaresan M

உலகை வியக்க வைக்கும் வகையில் ஜப்பானின் முன்னணி கார் நிறுவனமான ஹோண்டாவுடன் நிஸ்ஸான் இணைந்துள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிறுவனங்களின் பங்குகள் 2025 ஆம் ஆண்டு டோக்கியோ பங்கு சந்தையில் பட்டியிலிடப்படவுள்ளது. இதையடுத்து, உலகின் அதிக கார்கள் விற்பனை செய்யும் ஜப்பானின் டொயாட்டோ ஜெர்மனியின் போக்ஸ்வேகன் நிறுவனங்களுக்கு அடுத்த மூன்றாவது பெரிய நிறுவனமாக இது உருவாகியுள்ளது. இந்த இணைப்புக்கு 5 காரணங்கள் முக்கியமாக உள்ளன.

இந்த இரு நிறுவனங்களும் இணைக்கப்படுவததால் போட்டியை எளிதாக சமாளிக்க முடியும். ஜப்பானில் இரண்டாவது அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இவை மாறுகின்றன.

சீனாவின் பிஒய்டி நிறுவனம் எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இது தவிர Xpeng, Nio மற்றும் Li Auto போன்ற பிற சீன நிறுவனங்களும் அந்த நாட்டில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் கோலோச்சுகின்றன. சீனாவில் ஒரு காலத்தில் ஹோண்டா, நிஸ்ஸான் நிறுவனங்கள் நல்ல சந்தையை கொண்டிருந்தன. தற்போது, அந்த சாம்ராஜ்யம் சரிந்துள்ளது. சீன மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கும் வகையில், இந்த நிறுவனங்கள் இணைந்துள்ளன.

செலவினங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே தொழிற்சாலையில் இரு பிராண்டு கார்களையும் உற்பத்தி செய்ய முடியும். ஹோண்டா மற்றும் நிஸ்ஸான் ஆகியவை இணைந்து மென்பொருள் மற்றும் மின்சார வாகனங்களை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளன.

நிஸ்ஸான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. சந்தையில் போட்டியிடும் வகையில் நிறுவனத்தை கட்டமைக்க வேண்டிய நிலைக்கு அந்த நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் பிரான்சின் ரெனால்ட் நிறுவனத்திடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை நிஸ்ஸான் ரத்து செய்த பிறகு , அந்த நிறுவனத்தில் 9 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். அதாவது, இந்த நிறுவனத்தில் பணி புரியும் மொத்த பணியாளர்களில் 6 சதவிகிதம் பேர் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர். இதனால், 20 சதவிகிதம் உற்பத்தி திறன் குறைந்துள்ளது. 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பை சந்தித்துள்ளது.

இரு நிறுவனங்களும் கொண்டுள்ள சந்தை மதிப்பும் , தொழில்நுட்பமும் பெரும்பாலும் ஒத்து போகின்றன. உதாரணமாக, நிஸ்ஸான் ஐரோப்பிய சந்தையில் வலுவாக உள்ளது, அதே நேரத்தில் ஹோண்டா ஐரோப்பாவுக்காக வாகனங்களை தயாரிக்கவில்லை. நிஸ்ஸான் சிறந்த பாடி அமைப்பு கொண்ட வாகனங்களை உருவாக்குகிறது, அதே நேரத்தில் ஹோண்டா சிறந்த பெட்ரோல் இன்ஜின் கார் தயாரிப்பதில் தனிதிறன் கொண்டது.

மேலும், எலக்ட்ரிக் பிரிவில் ஹோண்டா புதுமுகம் ஆகும். அதே நேரத்தில் நிஸ்ஸான் 2009 ஆம் ஆண்டே எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி விட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு Nissan LEAF அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நிறுவனங்களும் வெவ்வெறு திறன் கொண்டதாக உள்ளன. இதனால், கூட்டு முயற்சியால் மீண்டும் சந்தை மதிப்பை பெற இரு நிறுவனங்களும் கரம் கோர்த்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

அல்லு அர்ஜுனிடம் 3 மணி நேரமாக தொடரும் போலீஸ் விசாரணை!

எம்.ஜி. ஆர் அமைச்சராக்க ஆசைப்பட்ட அந்த 12 பேர் யார் தெரியுமா? – சைதை துரைசாமி சொல்லும் ரகசியம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share