ஈரான் நாட்டில் நேற்றிரவு இஸ்ரேல் 100 விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் பெரும்பாலானவர்கள் இஸ்ரேலிய பெண் பைலட்டுகள் என்று கூறப்படுகிறது. இற்கிடையே, ஈரான் நாட்டு சுப்ரீம் லீடர் அலி கமேனி உடல் நிலை பாதிப்படைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டின் சுப்ரீம் லீடராக 1989 ஆம் ஆண்டு முதல் அயோதுல்லா அலி கமேனி இருந்து வருகிறார். இவரின் தலைமையின் கீழ் 6 ஜனாதிபதிகள் அந்த நாட்டில் பணியாற்றியுள்ளனர். கடந்த 35 ஆண்டுகளாக ஈரான் நாட்டின் சுப்ரீம் லீடராக அலி கமேனி இருக்கிறார்.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிக ஆண்டுகள் பதவியில் இருந்தவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. தற்போது, இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில்,ஈரான் படைகளை தயாராக இருக்கும்படி கமேனி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு, அவரும் மிக பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்.
தற்போது, 85 வயதான கமேனியின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு அவருக்கு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போதிருந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. சமீபத்தில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா பெய்ருட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவரின், இறுதிச்சடங்கையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கமேனி பங்கேற்றார். அதற்கு பிறகு, மீண்டும் அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவரின் இரண்டாவது மகன் 55 வயதான மோஜ்தாபா ஈரான் நாட்டில் சுப்ரீம் லீடராக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
ஈரான் நாட்டில் 1979 ஆம் ஆண்டு வரை மன்னராட்சிதான் நடைபெற்றது. அமெரிக்க ஆதரவு மன்னரான முகமது ரிசா ஷாவை புரட்சிப்படையினர் ஆட்சியில் இருந்து விரட்டினர். தொடர்ந்து, அந்த நாட்டில் ரோகுல்லா கமேனி தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டு, தேசிய வாக்கெடுப்பு மூலம் இஸ்லாமிய குடியரசாக ஈரான் மாற்றப்பட்டது.
கடந்த 1989-ஆம் ஆண்டு ரோகுல்லா கமேனி மறைவுக்கு பிறகு, அயோதுல்லா கமேனி ஈரான் நாட்டின் சுப்ரீம் லீடராக பதவியேற்றார். Islamic Revolutionary Guards Corps என்று அழைக்கப்படும் புரட்சிப்படையினர்தான் ஈரான் நாடு குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். அந்த வகையில், விரைவில் கமேனியின் சுப்ரீம் லீடர் பதவி குறித்து முடிவு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
‘என்ன கட்ஸ் சார்’ – ‘நந்தன்’ பட இயக்குநருக்கு நடிகர் ரஜினியிடம் இருந்து வந்த திடீர் போன்!
விஜய் இப்போது வரை நடிகர்தான்… நல்ல தலைவனாக சீமான் கொடுக்கும் ஐடியா!