யார் இந்த நீதிபதி பி.வி.நாகரத்னா?

இந்தியா

பணமதிப்பழிப்பு வழக்கில் நேற்று (ஜனவரி 2) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

2016ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் நேற்று  நீதிபதிகள் அப்துல்  நசீர்,  பி.ஆர்.கவாய்,  ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. 4:1 என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மற்ற 4 நீதிபதிகளும்  அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை செல்லும் என்று  தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

Who is this judge BV Nagaratna

நீதிபதி நாகரத்னா கூறுகையில், “ அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையும் நாடாளுமன்றத்தின் மூலம் சட்டப்படியே நடந்திருக்க வேண்டுமே தவிர, அரசாங்கத்தின் அறிக்கை மூலமாக இல்லை” என்று தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் யார் இந்த பி.வி.நாகரத்னா என மக்கள் பலரும் தேட ஆரம்பித்துள்ளனர்.

யார் இவர்?

1962ஆம் ஆண்டு  கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் பிறந்தார்.  உச்ச நீதிமன்றத்தின் 19ஆவது தலைமை நீதிபதியாக இருந்த எ.சீ.வெங்கடராமையாவுக்கு மகளாக பிறந்தார். டெல்லி சட்ட பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார் நாகரத்னா.

1987ஆம் ஆண்டு கர்நாடக பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.

பெங்களூரில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் பயிற்சி பெற்ற அவர், அரசியலமைப்புச் சட்டம், வணிக மற்றும் காப்பீட்டுச் சட்டம், சேவைச் சட்டம், நிர்வாக மற்றும் பொதுச் சட்டம், நிலம் மற்றும் வாடகைச் சட்டங்கள், குடும்ப நல சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் வாதாடியுள்ளார்.

Who is this judge BV Nagaratna

ஏறத்தாழ 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருந்த நாகரத்னா 2008ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர்  2010ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதி ஆனார்.

11 ஆண்டுகள் கர்நாடகாவில் பணியாற்றிய நிலையில், 2021ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார். குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றார்.

முக்கிய தீர்ப்புகள்

2012ம் ஆண்டு ஒளிபரப்பு ஊடகங்களை கட்டுப்படுத்த தன்னாட்சி மற்றும் சட்டப்பூர்வ முறையை அமைக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது மத்திய அரசை வலியுறுத்தினார்.

2019ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில் கோயில் ஒன்றும் வணிக நிறுவனம் அல்ல. அதன் பணியாளர்கள் பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் கருணைத் தொகையைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்றிருந்தார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  இந்த தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட விசாரணை அமர்விலும் நாகரத்னா இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று பணமதிப்பழிப்பு  வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளார். நீதிபதி நாகரத்னாவின் இந்த தீர்ப்பு மத்திய அரசு மீது விழுந்த அடி என்று  காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் நாகரத்னா

உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை தலைமை நீதிபதியாக எந்த பெண் நீதிபதியும் இருந்ததில்லை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி என்பது, ஓய்வு பெற இருக்கும் தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதிக்கு வழங்கப்படுகிறது.

Who is this judge BV Nagaratna

அந்த வகையில் இந்தியத் தலைமை நீதிபதி பதவிக்கான வாய்ப்புகள் பி.வி.நாகரத்னாவுக்கு  2027-ம் ஆண்டு கிடைக்கும். அப்போது, இந்தியா தனது முதல் பெண் தலைமை நீதிபதியைப் பெறும்.

சீனியாரிட்டி வரிசையில் பி.வி.நாகரத்னாவுக்கு முன் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், அப்துல் நசீர், கே.எம்.ஜோசப், முகேஷ்குமார் ரசிக்பல் ஷா, அஜய் ரோஸ்டகி ஆகியோர் இருந்தாலும் அவர்கள் இந்த ஆண்டு ஓய்வு பெறுகின்றனர்.

அதுபோன்று  நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் என நாகரத்தினாவுக்கு முன் 20 மூத்த நீதிபதிகள் இருந்தாலும் அவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஓய்வு பெறுகின்றனர்.

இந்த நிலையில் சீனியாரிட்டிபடி 2027 ஆம் ஆண்டு நாகரத்னா பதவி ஏற்க கூடும். எனினும் 29.10.2027 அன்று அவர் ஓய்வு பெற இருப்பதால் 36 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருக்கக்கூடும் என்று நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரியா

புத்தாண்டில் சாதனை சதம் அடித்த சிஎஸ்கே வீரர்!

கிச்சன் கீர்த்தனா : மதுர் தட்டை

பொங்கல் விடுமுறைக்கு  எத்தனை சிறப்பு பஸ்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று ஆலோசனை!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *