ராணுவத்தில் சேவை: இந்தியாவின் 100வது கோடி குழந்தையின் நாட்டுப்பற்று!

Published On:

| By Kumaresan M

கடந்த 2000 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி காலை 5.05 மணிக்கு டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறந்தது. இந்த குழந்தைதான் இந்தியாவின் 100வது கோடி சிட்டிசன். மத்திய அமைச்சர்கள் அந்த குழந்தையுடன் அப்போது புகைப்படம் கூட எடுத்துக் கொண்டனர்.

உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக 100 கோடி மக்கள் தொகையை எட்டிய நாடு என்ற பெயரும் இந்த குழந்தையால் இந்தியாவுக்கு கிடைத்தது. அதோடு, மக்கள் தொகையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற சிந்தனையையும் அரசுக்கு இந்த குழந்தை ஏற்படுத்தியது.

இந்த குழந்தைக்கு அஸ்தா என்று பெற்றோர் பெயர் சூட்டினர்.டெல்லியைச் சேர்ந்த தம்பதி அசோக் அரோரா – அஞ்சனா தம்பதியின் மகள்தான் அஸ்தா. இந்த குழந்தை பிறந்ததில் இருந்து மீடியாக்கள் மொய்க்க தொடங்கி விட்டன. ஆனால், சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் என்பதால் அஸ்தாவையும் அவரின் சகோதரரையும் படிக்க வைக்கவே பெற்றோர் சிரமப்பட்டனர்.

படிப்பு, விளையாட்டு, டான்ஸ், பேச்சுப் போட்டி என பள்ளியில் அனைத்து விதமான திறமையிலும் அஸ்தா முதலிடம்தான். 100வது கோடி குழந்தை என்பதால், அரசும் சில உதவிகளை அஸ்தாவுக்கு செய்துள்ளது. ஸ்காலர்ஷிப் போன்றவையும் கிடைத்துள்ளது. இதனால், பள்ளி படிப்புக்கு பிறகு , நர்சிங் படித்துள்ளார் அஸ்தா. ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டுமென்பது அவரின் கனவு. அதன்படி, ராணுவத்தில் இணைந்துள்ளார். தற்போது, கவுஹாத்தி ராணுவ மருத்துவமனையில் அவர் நர்சாக பணியாற்றி வருகிறார்.

அஸ்தா பிறந்த பின்னர் மட்டும் இந்தியாவில் 441,719,852 குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் தினமும் 42,000 குழந்தைகள் பிறப்பதாக மதிப்பிடப்பட்டிருந்தது. எனவே. நூறாவது கோடி குழந்தை எங்கே பிறக்கும்? என்பதைத் துல்லியமாக அறிய முடியாதது என்பதே உண்மை . அதே வேளையில், சிறிய குடும்பங்களை ஊக்குவிக்கும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு அஸ்தாவை இந்தியாவின் 100வது கோடி குழந்தையாக அறிவித்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

“ஆண்ட பரம்பரை” : அமைச்சர் மூர்த்தியின் பேச்சு வைரல்!

பஸ்சில் மூட்டை கடி…நீதிமன்ற உத்தரவால் பீதியடைந்த ரெட் பஸ் ஆப்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share