‘ என் அப்பா இறந்தப்போ, காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதம் ‘ – பிரணாப் மகள் ஆதங்கம்!

Published On:

| By Kumaresan M

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்து விட்டார். அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன் டெல்லியில் இன்று (டிசம்பர் 28) அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு நினைவு இடமும் அமைக்கப்படவுள்ளது.

இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமருக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு தடையாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர். அதோடு, மன்மோகனின் இறுதிச்சடங்கில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமாக இருந்த பிரணாப் முகர்ஜி இறந்த போது காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதத்தை அவரின் மகள் ஷஸ்மிஸ்தா விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, “எனது தந்தை இறந்த போது, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இரங்கல் கூட்டத்துக்கு கூட அழைப்பு விடுக்கவில்லை. அப்பா இறந்தபோது, செயற்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கூட காங்கிரஸ் கருதவில்லை.

குடியரசு தலைவர்கள் 4 பேருக்கு அப்படி கூட்டவில்லை என கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். ஆனால், அது பொய். கே.ஆர்.நாராயணன் மறைவை அடுத்து காங்கிரஸ் செயற்குழுவை கூட்டியதும், இரங்கல் தீர்மானத்தை தயார் செய்ததும் எனது அப்பாதான் என அவரது டைரி படித்து பின்னர் தெரிந்து கொண்டபோது வேதனையாக இருந்தது. என்று தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் சி.ஆர். கேசவன் தன் பதிவில் கூறியிருப்பதாவது, ‘கடந்த 2004 ஆம் அண்டு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மறைந்தார். அவருக்கு நினைவிடத்தை கடைசி வரை காங்கிரஸ் கட்சி கட்டவே இல்லை. 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடிதான் நினைவிடம் அமைத்தார். பின்னர் பாரத ரத்னாவும் வழங்கினார். ஏன் நரசிம்மராவின் உடலை அடக்கம் செய்ய கூட காங்கிரஸ் விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் அவரின் உடல் அஞ்சலி செலுத்த வைக்கப்படவில்லை.

நரசிம்மராவின் உடலை அவரின் குழந்தைகளை ஹைதரபாத்தில் புதைக்க ஆசைப்படுவதாக கூறி அங்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வைத்தனர். இந்த தகவலை மன்மோகன்சிங்கின் மீடியா அட்வைசராக இருந்த சஞ்சய் பாரு தனது புத்தகத்தில் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொள்கை இல்லாத காங்கிரஸ் கட்சியின் வரலாற்றுப் பாவங்களை நம் தேசம் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ கூடாது” என்றும் கேசவன் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

விஜயகாந்த் குருபூஜை : கேப்டன் ஆலயத்தில் தலைவர்கள் அஞ்சலி!

ஜீன்ஸ் அணிந்ததால் தகுதி நீக்கம்; கார்ல்சனுக்கு நடந்த சோகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share