போரில் ரஷ்யாவுக்கு தோல்வி ஏற்பட்டால் புதினின் நிலை என்ன?
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு தோல்வி ஏற்பட்டால் புதினின் நிலை என்ன என்பது குறித்து ரஷ்யாவின் முன்னாள் தூதர் போரிஸ் பாண்டாரேவ் விளக்கமளித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனுக்கு தனது படைகளை ரஷ்யா அனுப்பியதும் அதிக பாதிப்புகளை உக்ரைன் எதிர்கொள்ளும் என பலர் கணிப்பு வெளியிட்டனர்.
எனினும், ரஷ்ய வீரர்கள் பலரை வீழ்த்தி, தனது பூமியை பாதுகாப்பதில் உக்ரைன் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதனால், ரஷ்யாவின் வருங்காலம் பற்றியும் அதிபர் புதினின் எதிர்காலம் குறித்தும் நிபுணர்கள் கணிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ஜெனீவாவுக்கான ரஷ்ய தூதரகத்தின் ஆயுத கட்டுப்பாட்டு நிபுணராகப் பணியாற்றிய ரஷ்யாவின் முன்னாள் தூதர் போரிஸ் பாண்டாரேவ்,
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு தோல்வி ஏற்பட்டால் என்ன நேரும் என்பது பற்றியும் புதினின் நிலை என்ன என்பது குறித்தும் ‘நியூஸ் வீக்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,
“புதின் பதவியில் இருந்து மாற்றப்படுவார். அவர் ஒன்றும் சூப்பர் ஹீரோ இல்லை. அவருக்கென்று எந்தவித சூப்பர் பவர்களும் கிடையாது. அவர் ஒரு சாதாரண சர்வாதிகாரியே” என்று கூறியுள்ளார்.
மேலும், “நாம் வரலாற்றை உற்றுநோக்கினால், இதுபோன்ற சர்வாதிகாரிகள் அவ்வப்போது பதவியில் இருந்து மாற்றப்பட்டே வந்துள்ளனர்.
அதனால், வழக்கம்போல் போரில் தோல்வி ஏற்பட்டால், ஆதரவாளர்களின் தேவைகளை திருப்தியடைய செய்ய முடியாவிட்டால், அவர்கள் வெளியேறுவது வழக்கம்.
ரஷ்யா போரில் தோற்று போனால், பதிலுக்கு புதினால் நாட்டுக்கு எதுவும் திருப்பி தர முடியாது. இனி புதின் தேவையில்லை என மக்கள் நினைக்க தொடங்கி விடுவார்கள். மன வருத்தமும், முரண்பாடுகளும், அச்சமும் ஏற்படும்.
இதனால், அதிபர் புதின் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என்று போரிஸ் பாண்டாரேவ் கூறியுள்ளார்.
இந்தப் போரானது பாக்முத் பகுதியில் தீவிரமடைந்துள்ளது என்றும் வாக்னர் எனப்படும் தனியார் கூலிப்படை அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த நகரை சிறைபிடித்த போதும், அதைச் சுற்றி வளைக்க தவறி விட்டனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாஸ்கோவிலுள்ள வால்டாய் ஏரி அருகில், புதின் ஓர் இடத்தை வாங்கியதாகத் தெரியவருகிறது. அந்த இடத்தில் 2020-ல் மாளிகை ஒன்றைக் கட்டத் தொடங்கி 2022-ல் முடிக்கப்பட்டிருப்பதாகவும்,
இந்த மாளிகை கிட்டத்தட்ட 13,000 சதுர அடியில், ரஷ்ய டச்சா பாணியில் முற்றிலும் மரத்தால் கட்டப்பட்டிருக்கிறது எனவும் சொல்லப்படுகிறது.
அதில் புதினின் குழந்தைகள், அவரின் காதலி அலினா கபீவா, அவருடைய உறவினர் சிலரும் தங்கியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.
இந்த மாளிகையின் மதிப்பு 120 மில்லியன் டாலர் எனவும், விளாடிமிர் புதின் ரகசியமாக இங்கு வந்து செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அமெரிக்க வங்கிகள் திவால் : ஜோ பைடனுக்கு நெருக்கடி!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: சாமை – கறிவேப்பிலை வற்றல்